For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அருவா மீசை... கொடுவா பார்வை... ஆஸ்திரியாவில் நடந்த வினோதப் போட்டி

Google Oneindia Tamil News

வியன்னா: ஆஸ்திரியாவில் நடந்த நூதனப் போட்டியில் 300க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு அத்தனை பேரையும் பிரமிக்க வைத்தனர்.

இதில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கக் காரணம், இது மீசை மற்றும் தாடிக்கான போட்டியாகும். உலக தாடி மீசை சாம்பியன்ஷிப் போட்டிதான் இது.

விதம் விதமான மீசை, விதம் விதமான தாடியுடன் இதில் கலந்து கொண்ட ஆண்கள் அனைவரையும் சுவாரஸ்யத்தில் ஆழ்த்தினர்.

நடுவர் குழு...

நடுவர் குழு...

இந்த போட்டியாளர்களிலிருந்து வெற்றியாளர்களைத் தேர்வு செய்ய பெரிய நடுவர் குழு அமைக்கப்பட்டிருந்தது. அவர்கள் ஒவ்வொருவரின் தாடி, மீசையை ஆராய்ந்து மார்க் போட்டு வெற்றியாளர்களைத் தேர்வு செய்தனர்.

விதவிதமாக தாடி, மீசை...

விதவிதமாக தாடி, மீசை...

அரிவாள் மீசை, கொடுவா மீசை, கரண்டி மீசை என தினுசு தினுசான மீசையுடனும், விதம் விதமான டிசைன் டிசைனான தாடியுடனும் இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் வந்திருந்தனர்.

வேடிக்கை பார்க்க...

வேடிக்கை பார்க்க...

சுருள் மீசை, சுறா மீசை, முறுக்கு மீசை, பூனை மீசை என ஒவ்வொருவரும் ஒரு டிசைனில் காணப்பட்டனர். அவர்களை வேடிக்கை பார்க்கவும் பெரும் கூட்டம் கூடியிருந்தது.

பரிசு...

பரிசு...

மீசை, பாதி தாடி, முழுத் தாடி என்று மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த பிரிவுகளில் வித்தியாசமான, நூதனமான, அனைவரையும் கவர்ந்த தாடி மீசை வைத்திருந்தோருக்கு பரிசுகள் தரப்பட்டன.

முதல்பரிசு...

முதல்பரிசு...

ஜெர்மனி, ஆஸ்திரியா, அமெரிக்கா, ஹங்கேரி, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பரிசுகள் கிடைத்தன. அதில் இயற்கையான மீசை பிரிவில் உல்ப்காங் ஸ்னீடர் முதல் பரிசைத் தட்டிச் சென்றார்.

பாதி மீசை...

பாதி மீசை...

பாதி மீசை பிரிவில் உல்ப்காங் செர்வே என்பவர் பரிசைத் தட்டிச் சென்றார். முழு மீசைப் பிரிவில் நாப் அர்மின் முதல் பரிசைத் தட்டிச் சென்றார்.

வினோதமான தாடி, மீசை...

வினோதமான தாடி, மீசை...

முன்னதாக இந்தப் போட்டியை நடத்திய கிழக்கு பவேரியன் தாடி கிளப்பின் தலைவரான வில்ஹெம் பிரியுஸ் கூறுகையில், ‘ஒவ்வொரு ஆண்டும் வி்னோதமான தாடி மீசையைப் பார்த்து வருகிறோம். இந்த முறையும் அதுபோல எதிர்பார்க்கிறோம்' என்று கூரியிருந்தார்.

English summary
Over 300 bearded gentlemen from 20 countries have competed in the World Beard Championships in Austria, showing off a spectacular array of moustaches, goatees and mutton chops.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X