For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெர்லின் சுவர் வீழ்ந்து.. 30 வருஷமாச்சு.. ஜெர்மானியர்கள் நெகிழ்ச்சி!

Google Oneindia Tamil News

பெர்லின் : கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியை பிரித்த சுவர் இடிப்பின் 30வது ஆண்டு தினத்தை ஜெர்மனி அனுசரித்தது. இதில் அந்நாட்டு அதிபர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, ஜெர்மன் அதிபர் பிராங்க் வால்டர் ஸ்டேய்ன்மேயர், கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தலைவர்கள், அந்த சுவற்றின் எஞ்சிய பகுதிகளில் மலர்களை வைத்து மரியாதை செலுத்தினர்.

பெர்லின் சுவர் வீழ்ச்சியின் இந்த 30வது ஆண்டுவிழாவை முன்னிட்டு கூகுள், டூடுள் வெளியிட்டது. மேலும் நமது பிரதமர் மோடியும் அயோத்தி விவகாரம் குறித்த தன்னுடைய உரையில், இந்த நிகழ்வை குறிப்பிட்டு பேசினார்.

எச்1பி விசா.. இந்தியர்களுக்கு தற்காலிக நிம்மதி.. கணவன்.. மனைவி அமெரிக்காவில் பணிபுரிய தடையில்லைஎச்1பி விசா.. இந்தியர்களுக்கு தற்காலிக நிம்மதி.. கணவன்.. மனைவி அமெரிக்காவில் பணிபுரிய தடையில்லை

ஜெர்மனியை பிரித்த சுவர் இடிப்பு

ஜெர்மனியை பிரித்த சுவர் இடிப்பு

கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியை பிரித்துவந்த சுவர் இடிக்கப்பட்டு அவை இரண்டும் ஒன்றாக இணைந்ததன் 30வது ஆண்டு நினைவு தினத்தை ஜெர்மனி கொண்டாடியது. இந்த இடிப்பு சம்பவம் சர்வதேச அளவில் சரித்திர நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

பெர்லின் சுவர் உருவாக்கம்

பெர்லின் சுவர் உருவாக்கம்

2ம் உலகப்போரின் விளைவாக சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் கடுமையான அழுத்தங்களை சந்தித்துவந்த ஜெர்மனியில் கிழக்கு மற்றும் மேற்கு மக்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்த இந்த சுவர் சுவர் எழுப்பப்பட்டிருந்தது.

குடும்பங்கள் இணைந்த நிகழ்வு

குடும்பங்கள் இணைந்த நிகழ்வு

கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியர்களின் பயணக் கட்டுப்பாட்டை நீக்க கிழக்கு ஜெர்மனி முன்வந்த நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பெர்லின் சுவற்றை கடந்த 1990ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி ஜெர்மனியர்கள் தகர்த்தனர். இதன்மூலம் இரண்டு பகுதிகளை சேர்ந்த குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் ஒன்றாக இணைந்தனர்.

30வது ஆண்டு நினைவுதினம்

30வது ஆண்டு நினைவுதினம்

சோவியத் யூனியன் முற்றிலும் வீழ்ந்து ஜெர்மனி புதிய சகாப்தத்தை துவங்கிய நிலையில், இந்த சுவர் இடிப்பின் 30வது ஆண்டுதினம் நாடெங்கிலும் அனுசரிக்கப்பட்டது. இதில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பூங்கொத்துகள் வைத்து மரியாதை

பூங்கொத்துகள் வைத்து மரியாதை

இந்த கொண்டாட்டத்தில் ஜெர்மன் அதிபர் பிராங்க் வால்டர் கலந்துகொண்டு, உரையாற்றினார். மேலும் சுவற்றின் எஞ்சிய பாகங்களில் பூங்கொத்துக்களை வைத்து மரியாதை செலுத்தினார்.

 அமைதியான புரட்சி

அமைதியான புரட்சி

பெர்னாயர் ஸ்ட்ராஸ் பெர்லின் சுவர் நினைவகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிபர், மக்களின் தைரியம், சுதந்திரம் குறித்த வேட்கை இல்லாமல் அமைதியான இந்த புரட்சி நடைபெற சாத்தியம் இல்லை என்று புகழாரம் சூட்டினார்.

நினைவிடத்தில் பூங்கொத்து

நினைவிடத்தில் பூங்கொத்து

இந்த நிகழ்வின்போது, ஜெர்மனி, போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தலைவர்களும் நினைவிடத்தில் பூங்கொத்துகளை வைத்து மரியாதை செலுத்தினர்.

English summary
Germany celebrated 30th anniversary of berlin wall fall
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X