For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வங்கதேசத்தில் அதிர்ச்சி.. இஸ்கான் கோயிலில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Google Oneindia Tamil News

டாக்கா: வங்கதேசத்தில் உள்ள இஸ்கான் கோயிலில் தங்கியுள்ள 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புகள் உறுதியாகியுள்ளன.

வங்கதேசத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அங்கு பலியானோர் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது.

31 ISKCON devotees test positive for Covid-19 at ‘locked down’ Bangladesh ashram

தலைநகர் டாக்காவில் சுவாமிபாக் பகுதியில் அமைந்துள்ளது கிருஷ்ணா கான்சியஸ்னஸ் இன்டர்நேஷனல் சொசைட்டி எனப்படும் இஸ்கான். இந்த ஆசிரமம் கடந்த மார்ச் 8ஆம் தேதி வங்கதேசத்தில் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டவுடன் கோயில் மூடப்பட்டுள்ளது.

அங்கு வெளியாட்களுக்கு அனுமதி இல்லை. இந்த நிலையில் அங்குள்ள கோயிலின் 31 உறுப்பினர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஜென்டாரியா காவல் நிலைய அலுவலர் சஜுமியா கூறுகையில் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். வைரஸ் பரவாமல் தடுக்க நாங்கள் அப்பகுதியின் சாலையை முற்றிலும் பூட்டியுள்ளோம்.

Recommended Video

    கொரோனா குறித்த சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்க மாட்டோம் - சீனா

    கடந்த மார்ச் 8ஆம் தேதி முதல் கோயிலுக்குள் யாருக்கும் அனுமதி இல்லை. இத்தனை கண்காணிப்புகள் இருந்தும் எப்படி இத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பது புரியவில்லை என்றார். இந்த கோயிலில் சாமியார்கள், பக்தர்கள், உறுப்பினர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.

    English summary
    31 ISKCON devotees test positive for Covid 19 at locked down Bangladesh Ashram.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X