For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லெஸ்பியன் ஜோடியின் குழந்தை.. 34 வயதில் பிரதமராகும் பின்லாந்தின் மரீன்..அசர வைக்கும் அரசியல் டிவிஸ்ட்

பின்லாந்தின் புதிய பிரதமராக இந்த வாரம் சன்னா மரீன் என்ற 34 வயது எம்பி பொறுப்பேற்க இருக்கிறார்.

Google Oneindia Tamil News

ஹெல்சின்கி: பின்லாந்தின் புதிய பிரதமராக இந்த வாரம் சன்னா மரீன் என்ற 34 வயது எம்பி பொறுப்பேற்க இருக்கிறார். உலகிலேயே இவர்தான் மிகவும் இளமையான பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்லாந்தின் பிரதமர் ஆன்டி ரின் என்பவர் ராஜினாமா செய்தார். இவருக்கு எதிராக அங்கு தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வந்தது. போக்குவரத்து ஊழியர்கள், போஸ்டர் ஊழியர்கள் தீவிரமாக போராடி வந்தனர்.

இவர்கள் மீது ஆன்டி ரின் போலீசாரை ஏவி விட்டு தாக்குதல் நடத்தினார். இதனால் ஆன்டி ரின்னுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் வாங்கிக் கொண்டது. இதனால் ஆன்டி ரின் பதவி விலக நேரிட்டது.

ஆளுகிற அதிகாரம்தான் உங்களுக்கு.. நாட்டை பிளக்கிற அதிகாரம் இல்லை.. லோக்சபாவை அதிர வைத்த வெங்கடேசன்ஆளுகிற அதிகாரம்தான் உங்களுக்கு.. நாட்டை பிளக்கிற அதிகாரம் இல்லை.. லோக்சபாவை அதிர வைத்த வெங்கடேசன்

புதிய பிரதமர்

இந்த நிலையில்தான் பின்லாந்தின் புதிய பிரதமராக இந்த வாரம் சன்னா மரீன் என்ற 34 வயது எம்பி பொறுப்பேற்க இருக்கிறார். உலகிலேயே இவர்தான் மிகவும் இளமையான பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது அங்கு போக்குவரத்து துணை அமைச்சராக இருக்கிறார்.

என்ன அமைச்சர்

என்ன அமைச்சர்

சமுதாய ஜனநாயக கட்சியை சேர்ந்த இவருக்கு இன்னும் மூன்று கட்சிகள் ஆதரவு தருகிறது. இந்த மூன்று கட்சிகளின் தலைவர்களும் பெண்கள்தான். அதிலும் இரண்டு பேருக்கு வயது 30க்கும் கீழ் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அங்கு ஆளும் கட்சியை சேர்ந்த எல்லா கட்சியும் பெண் தலைவர்களை கொண்டுள்ளது.

எப்படி இருந்தார்

எப்படி இருந்தார்

இவரின் அம்மாவும் அவரின் பெண் இணையும் சேர்ந்துதான் சன்னா மரீனை வளர்த்து இருக்கிறார்கள். அதன்படி முதல் லெஸ்பியன் தம்பதியின் குழந்தை அந்நாட்டில் பிரதமர் ஆகிறார் . நான் லெஸ்பியன் தம்பதியின் குழந்தை என்பதால் பல வருடங்கள் மறைந்து வாழ்ந்தேன் , இப்போது பிரதமர் ஆகிறேன் என்று பெருமையாக சன்னா மரீன் குறிப்பிட்டுள்ளார் .

இதற்கு முன்

இதற்கு முன்

இதற்கு முன் நியூசிலாந்து ஜெசிடா அடேர்ன் 39 வயதில் பிரதமர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் குடும்பத்திலேயே சன்னா மரீன்தான் முதல் முதலாக கல்லூரி சென்றவர். 25 வயதில் சமுதாய ஜனநாயக கட்சியில் சேர்ந்து 27 வயதில் கட்சியில் முக்கிய பொறுப்பை பெற்று 30 வயதிலேயே இவர் அமைச்சர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
34 year, daughter of a lesbian couple, Finnish minister Sanna Marin all set to Become World's Youngest PM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X