• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரவில் படுக்கும் போது 37.. காலையில் பார்த்தால் 16.. இது நிஜ ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ கதை!

Google Oneindia Tamil News

டெக்சாஸ்: டிரான்சியன்ட் குளோபல் அம்னிசியா எனும் வினோத ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்டு, நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம் விஜய் சேதுபதி மாதிரி கஷ்டப்பட்டு வருகிறார் அமெரிக்காவைச் சேர்ந்த டேனியல் என்பவர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கிரான்பெர்ரி எனும் பகுதியை சேர்ந்தவர் டேனியல் போர்டர். 37 வயதாகும் டேனியலுக்கு ரூத் எனும் மனைவியும், 10 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்வில் ஒரு நாள் விதி விளையாட ஆரம்பித்தது.

ஒரு நாள் காலை டேனியல் தனது படுக்கையில் இருந்து எழுந்தபோது, தன்னை ஒரு பள்ளி பருவ மாணவராக உணர்ந்தார். அதாவது தனது 16வது வயதிற்கு டைம் டிராவலாகி சென்று விட்டது டேனியலின் மனது. சுமார் 20 வருட வாழ்க்கையை அவர் சுத்தமாக மறந்துவிட்டார். தான் படித்தது, தனக்கு திருமணமானது, மகள் பிறந்தது என அனைத்தையுமே மறந்துவிட்டார் அவர்.

மனைவி அதிர்ச்சி

மனைவி அதிர்ச்சி

அன்றைய தினம் காலை எழுந்ததும் கண்ணாடியை பார்த்து தான் ஏன் வயதானது போன்றும், குண்டாகவும் இருக்கிறேன் என்று தனக்குத் தானே கேட்டு அதிர்ந்து போய் அலறியிருக்கிறார் டேனியல். அடுத்ததாகமனைவி ரூத்தை பார்த்து, ‘யார் நீ?' எனக் கேட்டிருக்கிறார். முதலில் டேனியல் ஏதோ விளையாடுகிறார் என நினைத்த ரூத், நேரமாகமாகத் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்திருக்கிறார்.

ஞாபகமறதி நோய்

ஞாபகமறதி நோய்

டேனியலை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது, அவருக்கு வந்திருப்பது டிரான்சியன்ட் குளோபல் அம்னிசியா (Transient Global Amnesia) எனும் அரிய வகை நோய் என்பது தெரியவந்தது. 'நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணோம்' படத்தில் சொல்வது போல நன்றாக தூங்கி எழுந்தால் 24 மணி நேரத்தில்கூட இது சரியாகிவிடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மனவேதனை

மனவேதனை

ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் டேனியலுக்கு இன்னும் பழைய நினைவுகள் திரும்பவில்லை. இப்போதும் தன்னை பள்ளி மாணவனாகவே அவர் கருதிக் கொண்டிருக்கிறாராம். ஆரம்பத்தில் தனது கணவர் தன்னையே மறந்துவிட்டாரே என ரூத் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டுள்ளார். ஆனால் போகப் போக தனது கணவரின் செயல்களை அவர் ரசிக்க ஆரம்பித்துவிட்டார்.

தொடர்ந்து சிகிச்சை

தொடர்ந்து சிகிச்சை

பள்ளி மாணவர்களுக்கே உண்டான நகைச்சுவை உணர்வுடன் டேனியல் பேசுவது மிகவும் பிடித்திருப்பதாக ரூத் கூறிகிறார். தெரப்பிக்கள் மூலம் டேனியல் விரைவில் குணமடைந்துவிடுவார் என அவர் நம்புகிறார். தனது 10 வயது மகளைப் போலவே, டேனியலையும் இன்னொரு குழந்தையாக பாவிக்கத் தொடங்கிவிட்டார்.

மருத்துமருத்துவர்கள் குழப்பம்வர்கள் குழப்பம்

மருத்துமருத்துவர்கள் குழப்பம்வர்கள் குழப்பம்

நன்றாக உறங்கச் சென்ற டேனியல் திடீரென டிரான்சியன்ட் குளோபல் அம்னிசியா நோயால் பாதிக்கப்பட்டது எப்படி என்பது குறித்து மருத்துவர்களால் தெளிவாக கூற முடியவில்லை. ஆனால் இந்த நோய் தாக்கத்துக்கு முன்பு டேனியலுக்கு வேலை நிமித்தமாக பொருளாதார நெருக்கடிகள் வந்துள்ளன. அதன் காரணமாக தான் வாங்கிய வீட்டில் இருந்து தனது பொற்றோரின் பண்ணை வீட்டிற்கு டேனியல் குடிபெயர்ந்துள்ளார்.

காரணம்

காரணம்

இதனால் கடுமையான மனஉளைச்சலில் சிக்கி தவித்து வந்திருக்கிறார் டேனியல். மேலும் அவரது முதுகு தண்டுவடத்தில் பிரச்சினை ஒன்று ஏற்பட்டிருக்கிறது. இதெல்லாம் சேர்ந்து தான் டேனியலுக்கு டிரான்சியன்ட் குளோபல் அம்னிசியா ஏற்பட காரணமாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்

நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்

டேனியனில் கதையை கேட்கும் போது கோமாளி படத்தை ரிவர்சில் பார்த்தது போல் உள்ளது. அதேபோல் நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணோம் விஜய் சேதுபதியும் நினைவில் வந்து போகிறார். மேலோட்டமாக பார்ப்பதற்கு டேனியின் கதை வேடிக்கையாகத் தோன்றினாலும், அவரை நம்பி வாழும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் மன வலியை நினைக்கும் போது வேதனையாகத்தான் இருக்கிறது. விரைவில் டேனியல் பூரண குணமடைந்து, அவரது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப நாமும் வாழ்த்துவோம்.

English summary
Daniel Porter, 37, from Granbury in the US state of Texas, woke up one day thinking that he was 16 and it was time to get ready for school. He did not remember that he had a wife named Ruth and a 10-year-old daughter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X