For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புளோரிடாவில் துப்பாக்கிச் சூடு.. 4 பேர் பலி.. 10 பேர் காயம்.. அடுத்தடுத்த சம்பவங்களால் மக்கள் பீதி

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகிவிட்டனர். 10 பேர் படுகாயமடைந்தனர்.

புளோரிடாவின் செயின்ட் ஜான்ஸ் ஆற்றின் அருகே உள்ள ஜாக்சன்வில்லே என்ற பகுதியில் பொழுதுபோக்கிற்காக பொது இடம் ஒன்று உள்ளது. இங்கு வீடியோ கேம் போட்டி நடத்தப்பட்டது. அப்போது அங்கு மேடன் கால்பந்து போட்டி தொடங்கியது.

4 dead, 10 injured as gunman opens fire at Florida

இந்நிலையில் திடீரென துப்பாக்கியை எடுத்த மர்மநபர்கள் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார். இதில் 4 பேர் பலியாகிவிட்டனர். இதனால் பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். இதனிடையே துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்களில் ஒருவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

இந்த நெரிசலில் சிக்கி 10 பேர் காயமடைந்துவிட்டனர். சம்பவ இடத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஜாக்சன்வில்லே பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். தற்போது மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

English summary
A gunman has killed 4 people and injured 10 others at Florida, US on Sunday. The incident took place at a video game tournament that was being streamed online from a restaurant in Jacksonville, Florida, local media said citing police sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X