For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடேங்கப்பா... 4 அடி உயரத்தில் நாய்... கின்னஸ் சாதனைக்காக வெய்ட்டிங்!

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து நாட்டில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்காக உயரமான நாய் ஒன்று காத்திருக்கிறது.

உயரம் என்றால் உங்க வீட்டு உயரம், எங்க வீட்டு உயரம் இல்லை. 4 அடியில் சும்மா சிங்கக் குட்டி மாதிரி காட்சி தருகிறது. இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸ் பகுதியிலுள்ள கிரேட் டேன் என்ற நாய்தான் அது. உலகின் மிகப்பெரிய நாயாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கவுள்ளது.

தெற்கு வேல்ஸ் நாய்

தெற்கு வேல்ஸ் நாய்

அந்நாட்டில் தெற்கு வேல்ஸ் பகுதியில் வசித்து வருபவர்கள் பிரையன் மற்றும் ஜூலி வில்லியம்ஸ் தம்பதி. அவர்கள் தான் கிரேட் டேனின் என்ற அந்த நாயின் உரிமையாளர்கள். அந்த நாயை அதன் உரிமையாளர்கள் தான் தற்போது வளர்த்து வருகின்றனர்.

3 வயது

3 வயது

3 வயதாகும் அந்த நாயின் உயரம் வியப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. கிரேட் டேனின் உயரம் சுமார் 4 அடி ஆகும்.

7 வயதுக் குழந்தையின் உயரம்

7 வயதுக் குழந்தையின் உயரம்

சராசரியாக 7 வயதான குழந்தை ஒன்று எவ்வளவு உயரம் இருக்குமோ, அந்த அளவிற்கு அந்த நாயின் உயரம் இருக்கிறதாம். அதன் எடை சுமார் 76 கிலோ என கூறப்படுகிறது.

கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை

இந்த நாய் தற்போது கின்னஸ் சாதனை படைக்கவுள்ளது. விரைவில் இதுகுறித்து அறிவிப்பை கின்னஸ் சாதனை புத்தக நிறுவனம் அறிவிக்கவுள்ளதாம். அனேகமாக அடுத்த மாதம் அறிவிக்கப்படலாமாம்.

English summary
A Great Dane measuring more than 4 feet is in the running to be a world record dog which is awaiting the judgement from Guinness World Records.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X