For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் மீண்டும் “ஆந்த்ராக்ஸ்”– மேற்கு வங்காளத்தில் 40 பேருக்கு பாதிப்பு?

Google Oneindia Tamil News

பன்குரா: பல ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச அளவில் பெரும் பீதியைக் கிளப்பிய ஆந்த்ராக்ஸ் நோயால் மேற்கு வங்கத்தில் உள்ள பன்குரா கிராமத்தில் 40 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் 2 மருத்துவ குழுவினர் அங்கு விரைந்துள்ளனர்.

பன்குரா கிராமத்தில் கடந்த சில வாரங்களாகவே மருத்துவமனையில் மர்மமான முறையில் சிலர் இறந்ததையடுத்து அவர்கள் ஆந்த்ராக்ஸ் நோயால் பலியாகியிருக்கக் கூடும் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. இதை பன்குரா சம்மிலினி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அதிகாரி மறுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பன்குரா கிராமத்தில் கால்நடைகள் இறந்ததால் அந்த பகுதியில் உள்ள 40 பேருக்கு ஆந்த்ராக்ஸ் பரவியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இதையடுத்து அங்கு சென்றுள்ள மருத்துவக் குழுவினர் அவர்களை சோதனை செய்து மாதிரிகளை சேகரித்து கொல்கத்தாவிற்கு அனுப்பி ஆய்வு செய்ய உள்ளனர்.

English summary
Forty persons were suspected to have contracted anthrax in West Bengal's Bankura villages following which teams of dermatologists were rushed there, official said today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X