For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹெச்-4 விசா மட்டுமில்லை பிரச்சினை.. இந்திய ஐடி ஊழியர்கள் அடி மடியிலேயே கை வைத்த அமெரிக்கா

2015ல் இந்திய ஐடி நிறுனங்கள் 14,792 ஹெச்-1பி விசாக்களை இந்திய ஐடி நிறுவனங்களுக்கு வழங்கிய நிலையில், 2017ம் ஆண்டில், 8,468 ஹெச்-1பி விசாக்களை வழங்கியிருந்தது அமெரிக்கா.

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்திய ஐடி நிறுவனங்கள் கடந்த 2 வருடங்களில் சுமார் 43 சதவீதம் ஹெச்-1பி விசா இழப்பை சந்தித்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகம், வெளிநாட்டு ஊழியர்களுக்கு தங்கள் நாட்டில் பணியாற்றும் வாய்ப்புகளை குறைக்க என்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் ஒவ்வொன்றாக செய்து வருகிறது.

இதில் ஹெச்-1பி விசா எண்ணிக்கையை குறைப்பதும் ஒரு நடவடிக்கையாக உள்ளது.

இந்திய ஐடி ஊழியர்கள்

இந்திய ஐடி ஊழியர்கள்

ஹெச்-1பி விசாவை பெரும்பாலும் ஐடி நிறுவன ஊழியர்கள் பெற்று அமெரிக்காவில் குடியிருந்து பணியாற்றுகிறார்கள். இவர்களின் வாழ்க்கை துணைக்கு ஹெச்-4 விசாக்கள் வழங்கப்பட்டு அவர்களும் பணியாற்ற ஒபாமா ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், ஹெச்-4 விசாவில் கை வைக்க துணிந்துள்ளது ட்ரம்ப் நிர்வாகம். சமீப நாட்களாக இது ஐடி நிறுவன வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. ஆனால், ஐடி ஊழியர்கள் அடி மடியில் கை வைக்கும், மற்றொரு வேலை சத்தமின்றி நடந்துள்ளது.

விசா எண்ணிக்கை குறைப்பு

விசா எண்ணிக்கை குறைப்பு

இந்திய ஐடி நிறுவனங்களுக்கான ஹெச்-1பி விசாக்களை 2015 முதலே அமெரிக்கா குறைக்க தொடங்கியுள்ளதாக தெரிகிறது. அமெரிக்காவை சேர்ந்த அமெரிக்க பாலிசிக்கான தேசிய பவுண்டேஷன் வெளியிட்டுள்ள புள்ள விவரப்படி, 43 சதவீதம் அளவுக்கு 2015-17க்கு இடைப்பட்ட காலத்தில், 43 சதவீதம் அளவுக்கு ஹெச்-1பி விசா எண்ணிக்கையை குறைத்துள்ளது அமெரிக்கா.

விசா தேவை

விசா தேவை

2015ல் இந்திய ஐடி நிறுனங்கள் 14,792 ஹெச்-1பி விசாக்களை இந்திய ஐடி நிறுவனங்களுக்கு வழங்கிய நிலையில், 2017ம் ஆண்டில், 8,468 ஹெச்-1பி விசாக்களை வழங்கியிருந்தது அமெரிக்கா. இருப்பினும் அமெரிக்க விசா கேட்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்தபடியேதான் உள்ளது என்கிறது அந்த அமைப்பின் புள்ளி விவரம்.

டிசிஎஸ், இன்போசிஸ்

டிசிஎஸ், இன்போசிஸ்

அமெரிக்க பொருளாதார வீச்சுக்கு முன்பாக, வருடாந்திர ஹெச்-1பி விசா எண்ணிக்கையை 85,000 என்ற உச்சவரம்பாக நிர்ணயித்துள்ளது போதிய அளவுக்கானது இல்லை என்கிறது அந்த அமைப்பு. இவ்வமைப்பு தகவல்படி, டிசிஎஸ் கம்பெனி 2017ம் ஆண்டு 2,312 ஹெச்-1பி விசாக்களை மட்டுமே பெற்றுள்ளது. 2015ம் ஆண்டில் டிசிஎஸ் நிறுவனம் 4,674 விசாக்களை பெற்றிருந்தது. எனவே டிசிஎஸ் 51 சதவீதம் அளவுக்கு விசாக்களை இழந்துள்ளது. இன்போசிஸ் 57 சதவீத விசாக்களை முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடும்போது இழந்துள்ளதாக தெரிகிறது.

English summary
A US think-tank has said that top seven Indian IT companies experienced a whopping 43% drop in their H-1B visa approvals between 2015 and 2017. The National Foundation for American Policy in a report said that the 8,468 new H-1B visas for Indian-based companies in the financial year 2017 equalled only 0.006% of the 160 million in the US labour force.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X