For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை சர்வதேச யோகா தினம்... 47 இஸ்லாமிய நாடுகள் பங்கேற்பு!

By Mathi
Google Oneindia Tamil News

நியூயார்க்: சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகளில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உட்பட 47 இஸ்லாமிய நாடுகள் பங்கேற்கின்றன.

ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இதற்காக இந்தியா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஐ.நா.சபையில் 177 நாடுகள் ஆதரவு அளித்தன.

47 Islamic Nations Join International Yoga Day

ஆனால் இந்த யோகா, இந்து மதத்தின் குறியீடாக விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஐ.நாவில் சர்வதேச யோகா தினமாக அறிவிப்பதற்கு ஆதரவளித்ததில் 47 நாடுகள் இஸ்லாமிய நாடுகள்..

ஆப்கானிஸ்தான், வங்கதேசம், துருக்கி, ஈரான், இந்தோனேசியா, ஐக்கிய அரபு எமிரேட், கத்தார் மற்றும் ஓமன் ஆகியவை இவற்றில் முக்கியமானவை.

அதே நேரத்தில் பாகிஸ்தான், செளதி அரேபியா, மலேசியா, புருணே, கேமரூன், லிபியா ஆகிய 8 இஸ்லாமிய நாடுகள் யோகா தினத்தை ஏற்கவில்லை. இவை இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிப்பவை. இதேபோல் வடகொரியா, எஸ்தோனியா, நமீபியா, ஜாம்பியா உள்ளிட்ட நாடுகளும் இதை ஆதரிக்கவில்லை.

English summary
There are 47 Islamic nations among the 177 countries of the United Nations General Assembly (UNGA) that officially co-sponsored–with India–a resolution to establish June 21 as “International Day of Yoga”.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X