For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அந்தமானில் காலையிலேயே கட்டிடங்களை குலுக்கிய நிலநடுக்கம்.. மக்கள் பீதி.. சுனாமி எச்சரிக்கை இல்லை

Google Oneindia Tamil News

போர்ட்பிளேர்: அந்தமானில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கின.

அந்தமானில் இன்று காலை 6.09 மணிக்கு மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இதனால் தூக்கத்தில் இருந்த மக்கள் அச்சமடைந்து தெருக்களுக்கு ஓடிச் சென்றனர்.

5.6 magnitude earthquake hits Andaman and Nicobar Islands on today

நிலநடுக்கத்தால், சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை. வங்கக்கடலில் அமைந்துள்ள அந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்டதும், சுனாமி ஏற்படும் அச்சம் இருப்பதாக பதற்றம் நிலவியது. ஆனால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட் ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்

10 கி.மீ தூரத்திற்கு இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமானில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ஏப்ரல் 1ம் தேதி ஒரே நாளில் 20 முறை லேசான நில நடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
An earthquake measuring 5.6 on the Richter Scale ratteled Andaman Islands region on Tuesday, the India Meteorological Department (IMD) said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X