• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐரோப்பாவில் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற சிறந்த 5 நாடுகள்!

By Veera Kumar
|

"உங்களை வாய் திறக்கவிடாமல் செய்துவிட்டு, பிறகு கதை சொல்லியாக மாற்றுவதே சுற்றுலா" என்பது இப்ன் பட்டுடாவின் கருத்து. ஐரோப்பா அதுபோன்ற ஒரு சுற்றுலா விரும்பிகளின் பகுதி. அனைத்து சீசனிலும் சுற்றுலா செல்ல உகந்த பகுதி ஐரோப்பா.

2016ல் நீங்கள் சுற்றுலா செல்ல விரும்பும் நாடுகள் ஐரோப்பாவில் இருந்தால், உங்களின் பணியை எளிதாக்கவே இந்த கட்டுரை. சுற்றுலாவுக்கு சிறந்த டாப் 5, ஐரோப்பிய நாடுகளை இதில் பட்டியலிட்டுள்ளோம்.

1. சுவிட்சர்லாந்து

ஆல்ப்ஸ் மலை உங்களுக்கு துணையாகவே கூட வரும் சுவிட்சர்லாந்து, இந்திய வெப்பத்தை மறக்கச் செய்யும் குளிர் பிரதேசம். பனி படர்ந்த மலைகள், இயற்கையின் கொஞ்சும் அழகு எங்கெங்கு நோக்கினும் உங்கள் கண்களுக்கு தென்படும். மலையேற்றம், ஹெலி-ஸ்கையிங், ஸ்கையிங் என பல வகை பொழுது போக்கு அம்சங்களுக்கு இங்கு வாய்ப்பு உள்ளது.

5 countries in Europe that must be on your travel bucket list of 2016

ஜங்பிரொஜோஸ்-ஐஸ் பேலஸ், ஸ்பின்ஸ் ஆப்சர்வேடரி, மவுண்ட் டைட்லிஸ்-டைட்லிஸ் கோன்டோலா, டைட்லிஸ் க்ளிப் வாக், ஜெர்மட்-ஜ்வெஸிமென், மோன்ட்ரெக்ஸ், மோன்ட் பிளான்க், லேக் பிரின்ஸ், ஜெனிவா ஏரி, இன்டர்லகேன் போன்றவை சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள்.

2. இங்கிலாந்து ஐக்கிய ராஜ்யம்

இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வட ஐஸ்லாந்து ஆகியவை இணைந்து உருவானதுதான் ஐக்கிய ராஜ்யம். நியோ-கிளாசிக்கல் ஸ்டைல் கட்டிடங்கள், பல்வேறு வகைப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்கள், செழுமையான பாரம்பரியம் மற்றும் கலாசாரம் ஆகியவை இங்கிலாந்தை சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாக்கியுள்ளது.

5 countries in Europe that must be on your travel bucket list of 2016

சுற்றுலா பயணிகள் லண்டனில் இருந்து அவர்கள் பயணத்தை தொடங்கலாம். அந்த நகரில் பக்கிங்காம் பேலஸ், வெஸ்ட்மின்ஸ்டர் பேலஸ், செயின்ட் பவுல் கத்தீட்ரல், லண்டன் ஐ, மேடம் டஸ்சவுட்ஸ், எடின்பர்க்-எடின்பர்க் கேஸ்டில், மோன்ஸ் மெக், பெல்பாஸ்ட், கிரான்ட் ஓபரா ஹவுஸ், பெல்பாஸ்ட் கேஸ்டில், கிளாஸ்கௌவ், கிளாஸ்கௌ பல்கலைக்கழகம், பெல்ஸ் பிரிட்ஜ், ரிவர்சைட் மியூசியம் ஆகியவை பார்க்க கூடிய இடங்கள்.

3. கிரீஸ்

சூரிய ஒளியுடன் கூடிய பீச்சுகள், குட்டி தீவுகள், கண்கவரும் கட்டிடங்கள் என சூழ்ந்து, ரொமான்டிக் மூடில் விடுமுறையை கழிக்க ஏற்ற இடம் கிரீஸ். சன்டோரினி, சைன்டக்மா சதுக்கம், நாடாளுமன்றம், அகாடமி, அறியாத ராணுவ வீரர் நினைவகம், பார்தனோன், டெல்பி-டெம்பிள் ஆப் அப்பல்லோ, அதேனியன் டிரசரி, ஆல்டர் ஆப் சியான்ஸ், ஒலிம்பியா-டெம்பிள் ஆப் ஜீயஸ், டெம்பிள் ஆப் ஹீரா, மேட்ரூன், மைகோனோஸ், பேரடைஸ் பீச், மைகோனஸ் கேஸ்டில், பர்னாசோஸ் ஆகியவை ரசிக்க வேண்டிய இடங்கள்.

5 countries in Europe that must be on your travel bucket list of 2016

4. பிரான்ஸ்

வரலாற்று ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் முக்கியமான நாடு பிரான்ஸ். உலகிலேயே அதிகம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முன்னணி நாடு பிரான்ஸ். யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்கள், கலாசார கூடங்கள் நிறைந்த நாடு பிரான்ஸ். இந்த நாட்டில்தான், காதல் நகரம் என்று அழைக்கப்படும் பாரீஸ் அமைந்துள்ளது. பல்வேறு வகையான சுவையான உணவுகளை ருசிக்க விரும்புவோருக்கு ஏற்ற நாடு பிரான்ஸ்.

5 countries in Europe that must be on your travel bucket list of 2016

பாரிஸ்-ஈபிள் டவர், முஸ்சே டி ஒர்சே, லவ்ரே மியூசியம், நோட்ரே டேம் டி பாரிஸ், ஆர்க் டே டிரியோம்பே, பலாயிஸ் கார்னியர், பேலஸ் ஆப் வர்சைல்ஸ், சார்ட்ரஸ் கத்தீட்ரல் மற்றும் சேம்ப்ஸ்-எல்சீஸ் ஆகியவை பார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள்.

5. ஜெர்மனி

கடந்த கால வரலாற்று சிறப்புக்கு மட்டுமல்ல, மார்டன் யுகத்திற்கும் தக்கபடி பன்முகம் கொண்ட நாடு ஜெர்மனி. ஆண்டுமுழுவதும் அந்த நாட்டு அரசால் நடத்தப்படும் விழாக்கள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன. இங்கு நடத்தப்படும் விழாவில் முக்கியமான ஆக்டோபர்ஃபெஸ்ட். சிறப்பான இரவு வாழ்க்கையும் இங்கு உண்டு.

5 countries in Europe that must be on your travel bucket list of 2016

பெர்லின்-டபிள்யூடபிள்யூஐஐ பேட்டில் ஃபீல்ட், பிரான்டன்பர்க் கேட், ரெயிசெஸ்டேக் பில்டிங், மெமோரியல் டூ தி மர்டரர்ட் ஐரோப்பிய யூதர், செக்பாயிண்ட் சார்லி, முனிச்-நெம்பென்பர்க் அரண்மனை, ஹொப்பிராஹவுஸ் முன்சன், நெயுச்வன்ஸ்டெயின் கேஸ்டில், பவரியா-டெயுட்சஸ் மியூசியம், முனிச் ரெசிடன்ஸ், அல்டே பினாகோதெக், பிரான்க்பர்ட்-கோயெதே ஹவுஸ், அல்டே ஒபர், நடுர்மியூசியம் சென்கென்பர்க், பிரான்க்பர்ட் கத்தீட்ரல் ஆகியவை ரசிக்க வேண்டிய இடங்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Europe is the story waiting to be told. A destination for every season, a tour of Europe is a rollercoaster ride- compelling, mesmerizing and irrepressible- all at the same time! Whether it's a relaxed vacation or an adrenalin-pumping adventure- Europe has ample choices for all its visitors and makes sure each and everyone one of you gets just what you're looking for. And for a place, so welcoming, it is imperative that this fascinating continent prominently figure on your travel bucket list of 2016. To make things easier, we bring you the top 5 countries in the European region. These splendid places, housing some of the most monumental structures that narrate stories of their country's glorious past, truly immortalize Europe Tourism. Read on:
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more