For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொடுமை.. சுடு தண்ணீர் சுற்றி வளைத்தது.. ஹோட்டல் அறையில் 5 பேர் உயிரோடு வெந்து சாவு!

Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷ்ய நகரமான பெர்மில் ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது. இதில், 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அங்குள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் கொதிக்கும் நீர் புகுந்ததால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தீக்காயங்களுடன் மேலும் மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

5 killed as boiling water floods Russian hotel

மினி-ஹோட்டல் கேரமலில் நேற்று இரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தலைநகர் மாஸ்கோவிற்கு கிழக்கே உள்ள யூரல் மலைகளுக்கு அருகில், பெர்ம் நகரம் அமைந்துள்ளது. இப்போது இங்கு நல்ல குளிர்காலம். எனவே சுடு தண்ணீர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

இங்குள்ள ஹோட்டலில் சூடான தண்ணீர் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் குழாய் திடீரென வெடித்துள்ளது. அதனால் தண்ணீர், ஹோட்டல் அறைகளுக்குள் புகுந்தது.

உடல்நலம் மற்றும் பாதுகாப்பு அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யத் தவறியதற்காக ஹோட்டல் நிர்வாகம் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
ஹோட்டலில் இருந்து தண்ணீர் முழுக்க வெளியேற்றப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

காதலன் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி.. காதலியை சீரழித்த கொடுமை.. 3 பேர் கைது.. வேலூர் கோட்டை ஷாக் காதலன் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி.. காதலியை சீரழித்த கொடுமை.. 3 பேர் கைது.. வேலூர் கோட்டை ஷாக்

இறந்தவர்களில் ஒரு குழந்தையும் இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்கள் இன்னும் சரியாக அடையாளம் காணப்படவில்லை. 3 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பிப்ரவரியில் கடைசியாக ஹோட்டல் பரிசோதிக்கப்பட்டபோது பாதுகாப்பு அம்சங்களில் பல மீறல்கள் பதிவாகியுள்ளதாக MBKh மீடியா தெரிவித்துள்ளது. அந்த பாதுகாப்பு குறைபாட்டை சீர் செய்யாமல் ஹோட்டல் நிர்வாகம் வைத்திருந்ததன் விளைவுதான், இரவு நடந்துள்ள இந்த சம்பவம்.

English summary
At least five people have died after a basement hotel in the Russian city of Perm was flooded with boiling water, officials say.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X