For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாகிஸ்தானில்...பரபரப்பான சாலையில் கார் ஓட்டிச்சென்ற 5 வயது குட்டிப்பையன்...அதிர்ச்சி வீடியோ வைரல்!

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் முல்தான் நகரின் பரபரப்பான சாலையில் 5 வயது சிறுவன் காரை ஒட்டிச்செல்லும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சிறுவனின் பெற்றோர்கள் குறித்து போலீசார் விசாரிக்க தொடங்கியுள்ளனர்.

5-year-old driving SUV in Pakistan, Videos gone viral

பாகிஸ்தானில் 5 வயது குட்டிப்பையன் ஒருவன் தனியாக ''கருப்பு டொயோட்டா லேண்ட் குரூசர் வி 8'' காரை ஓட்டிச் செல்கிற வீடியோ வெளியாகி உள்ளது. அதுவும் முல்தான் நகரின் பரபரப்பான சாலைகளில் ஒன்றான போசன் சாலை வழியாக அந்த குட்டிப்பையன் காரை ஓட்டிட்டு போறதை பார்த்ததும் பலர் அதிர்ச்சி அடைந்தனர்.

 ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ

18 வயது வந்தவுடன்தான் ஓட்டுநர் உரிமம் கிடைக்கும், அதன்பிறகுதான் வாகனம் ஓட்ட முடியும் என்ற விதி இருக்கிறது. ஆனால் காரின் பிரேக், ஆக்சிலேட்டர் கூட எட்டாத குட்டி சிறுவனுக்கு காரை ஓட்ட அந்த சிறுவனின் தாய், தந்தை அனுமதித்தது எப்படி என இந்த வீடியோவை பார்த்த பலரும் கேள்வி எழுப்புகின்றனர். ஒரு பிஞ்சுவின் உயிரோடும், மற்றவர்களின் உயிரோடும் இப்படியா விளையாடுவது? என அந்த சிறுவனின் தாய், தந்தையை திட்டி தீர்த்து வருகின்றனர்.

அதுபோக சாலைகளில் உள்ள போலீசார், டிராபிக் போலீசார் இதை ஏன் பார்க்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சிறுவன் காரை ஓட்டிச்செல்லும் வீடியோ வைரல் ஆகியுள்ளதால் அந்த சிறுவனின் பெற்றோர்கள் குறித்து போலீசார் விசாரிக்க தொடங்கியுள்ளனர். காரின் பதிவு எண்ணை வைத்து அந்த சிறுவனின் பெற்றோரை பிடித்து விடுவோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

English summary
The scene of a 5-year-old boy sticking his car on a busy road in the city of Multan in Pakistan has caused shock
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X