For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Howdy Modi Live: 'எல்லாரும் சௌக்கியம்'.. தமிழ் உள்பட அனைத்து இந்திய மொழியிலும் பேசிய மோடி

Google Oneindia Tamil News

ஹூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகருக்கு இன்று வருகை தந்துள்ள பிரதமர் மோடி. 'ஹௌடி மோடி' (மோடி நலமா) நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். 50,000 அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் உரையாற்றுகிறார்கள்

Newest First Oldest First
12:20 AM, 23 Sep

பிரதமர் மோடியும் டிரம்பும் கையை கோர்த்துக்கொண்டு ஸ்டேடியத்தை வலம் வந்தனர்
12:19 AM, 23 Sep

பிரதமர் மோடியின் உரை நிறைவு பெற்றதை தொடர்ந்து நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
12:18 AM, 23 Sep

அதிபர் டிரம்ப் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இந்தியா வர வேண்டும் என்று விரும்புகிறேன். எங்கள் நட்பு நம் கனவுகளையும், எதிர்காலத்தையும் புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும்: மோடி.
12:12 AM, 23 Sep

தீவிரவாதத்திற்கும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பவர்களுக்கும் எதிரான ஒரு தீர்க்கமான போருக்கான நேரம் வந்துவிட்டது: மோடி
12:12 AM, 23 Sep

அமெரிக்காவில் 9/11 அல்லது மும்பையில் 26/11 ஆக இருந்தாலும், சதிகாரர்கள் எங்கே இருக்கிறார்கள்? பிரதமர் மோடி
12:10 AM, 23 Sep

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கின் வளர்ச்சிக்காகவே பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. தீவிரவாதிகளும். பிரிவினைவாதிகளும் அதை தவறாக பயன்படுத்தினார்கள். இப்போது அங்குள்ள மக்களுக்கு சம உரிமை கிடைத்துள்ளது: மோடி.
12:07 AM, 23 Sep

எங்களைப் பொறுத்தவரை, 'வணிகத்தை எளிதாக்குவது' போலவே 'வாழ்க்கையை எளிமையாக்குது முக்கியம். ஆனால் அதற்கு சாதாரண மக்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டியது முக்கியம்: பிரதமர் மோடி.
12:07 AM, 23 Sep

சாதாரண மக்கள் அதிகாரம் பெறும்போது தான் சமுகம் மற்றும் பொருளாதார வளர்சசியின் பாதையில் தேசம் முன்னேறுகிறது: பிரதமர் மோடி
11:52 PM, 22 Sep

இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் 'எல்லோரும் நலம்' என்ற வாக்கியத்தை மோடி பேசினார்
11:46 PM, 22 Sep

எதையும் மாற்ற முடியாது என்ற மனநிலை உடையவர்களூக்கு இந்தியா சவாலாக உள்ளது: மோடி
11:46 PM, 22 Sep

இப்போது நாம் உயர்ந்த இலக்கை அடைவதுடன் புதிய உயரத்தையும் அடைகிறோம். : மோடி
11:42 PM, 22 Sep

நமது ஜனநாயகத்தின் துடிப்பான அடையாளமே பன்முகத்தன்மை தான்: பிரதமர் மோடி
11:42 PM, 22 Sep

பல நூற்றாண்டுகளாக நமது தேசத்தில் மொழிகள் வளர்ந்து வருகின்றன; மோடி
11:42 PM, 22 Sep

நமது பல்வேறு மொழிகள் தான் நம் இந்திய ஜனநாயகத்தின் அடையாளம்: மோடி
11:38 PM, 22 Sep

ஹவுடி மோடி என்று இந்த நிகழ்ச்சியை அழைக்கிறார்கள். ஆனால் நான் 130 கோடி இந்தியர்களுக்காக பணியாற்றும் சாதாரண மனிதன் தான்: மோடி.
11:38 PM, 22 Sep

இங்குள்ள சூழ்நிலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தனிச்சிறப்படையதாக இருக்கிறது. டெக்ஸாஸை பற்றி பேசும் போதெல்லாம் பிரம்மாண்டமாக இருக்கிறது. ஒரு வரலாறு உருவாக்கப்படுவதை நான் காண்கிறேன். அத்துடன் ஒரு புதிய கெமஸ்டரி உருவாதையும் பார்க்கிறேன்: பிரதமர் மோடி.
11:27 PM, 22 Sep

பிரதமர் மோடி இந்தியில் உரையாற்றி வருகிறார்
11:16 PM, 22 Sep

இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும். இரண்டு நாடுகளும் இந்த கருத்தில் ஒரே நிலைப்பாடு கொண்டுள்ளது. 2 நாடுகளும் தங்கள் எல்லையை பாதுகாக்க வேண்டும் - டிரம்ப்
11:15 PM, 22 Sep

எரிசக்தி துறையில் இரண்டு நாடுகளும் பெரிய அளவில் ஒப்பந்தம் செய்துள்ளது. உலகில் பெரிய எரிசக்தி உற்பத்தி நாடாக அமெரிக்கா மாறியுள்ளது - டிரம்ப்
11:15 PM, 22 Sep

இந்தியா உடன் பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்களை செய்து இருக்கிறோம் - டிரம்ப்
11:09 PM, 22 Sep

மருத்துவ துறையில் இந்திய அமெரிக்கர்கள் சாதனை படைத்து வருகிறார்கள். புதிய தொழில்நுட்பங்களை இந்தியர்கள் உருவாக்கி வருகிறார். பிரதமர் மோடியுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன் - டிரம்ப்.
11:09 PM, 22 Sep

இந்திய அமெரிக்க மக்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவி வருகிறார்கள் - டிரம்ப்
11:08 PM, 22 Sep

தனது அரசியல் சாதனைகளை அதிபர் டிரம்ப் பட்டியலிட்டு வருகிறார்
11:08 PM, 22 Sep

டெக்ஸாஸ் மாகாணத்தில் வேலைவாய்ப்பு அதிகம் ஆகியுள்ளது. டெக்ஸாஸ் மாகாணத்தில் வேலைவாய்ப்பின்மை மொத்தமாக குறைந்துள்ளது. வேலைவாய்ப்பின்மை 33% ஆக டெக்ஸாஸ் மாகாணத்தில் குறைந்துள்ளது - டிரம்ப்.
11:08 PM, 22 Sep

என்னுடைய ஆட்சியின் கீழ் ஹவுஸ்டன் வேகமாக வளர்ந்து வருகிறது - டிரம்ப்
11:06 PM, 22 Sep

300 மில்லியன் மக்களை மோடி வறுமையில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளார். மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி வியக்க வைக்கிறது - டிரம்ப்.
11:05 PM, 22 Sep

இரண்டு நாடுகளும் ஒரே மாதிரியான சட்டங்களை கொண்டு இருக்கிறது. இரண்டு நாடுகளும் மிகப்பெரிய வரலாற்று ஒற்றுமையை கொண்டது - டிரம்ப்.
11:04 PM, 22 Sep

நம்முடைய எண்ணங்கள் ஒரே மாதிரி இருக்கிறது. இரண்டு நாடுகளும் ஒரே மாதிரி வளர்ந்து வருகிறது - டிரம்ப்
11:03 PM, 22 Sep

இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு மிகவும் வலிமையாக உள்ளது. டிரம்ப் போல உண்மையான நண்பர் இந்தியாவிற்கு கிடைக்க மாட்டார் - டிரம்ப்
11:03 PM, 22 Sep

இங்கு கூடி இருக்கும் மக்களுக்கு மிகப்பெரிய நன்றி - டிரம்ப்
READ MORE

50,000 people  to cheer PM Modi at ‘Howdy Modi’ in Houston
English summary
50,000 strong crowd to cheer PM Modi at ‘Howdy Modi’ in Houston’s NRG stadium
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X