24 மணி நேரத்தில் 500 நிலநடுக்கம்.. 8000 அடிக்கு பறந்த புழுதி.. ஹவாயில் வெடித்த எரிமலை

ஹவாய்: அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான ஹவாய் தீவில் நேற்று மீண்டும் எரிமலை வெடித்துள்ளது. எரிமலையை தொடர்ந்து அங்கு வரிசையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மத்திய பசுபிக் கடல் அருகே இருக்கும் இந்த தீவில் கடந்த ஒருமாதமாக எரிமலை வெடித்துக் கொண்டுள்ளது. ஹவாய் தீவில் மிகவும் தீவிரமான நிலையில் வெடிக்கக்கூடிய வகையில் பல எரிமலைகள் இருக்கிறது.
அந்த வகையில் கிலாயூ என்ற எரிமலை நேற்று வெடித்தது. இந்த ஒரு எரிமலை மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 7 முறை வெடித்துள்ளது.

லாவா
இந்த தொடர் வெடிப்பு காரணமாக அங்கு ஊர் முழுக்க எரிமலை குழம்பு பரவி இருக்கிறது. எரிமலை மொத்தமாக வெடித்த காரணத்தால் மக்கள் அவர்கள் இருந்த பகுதியைவிட்டு வெளியேறினார்கள். மக்கள் வசிப்பிடத்தை நோக்கி இந்த எரிமலை குழம்புகள் வந்துள்ளது. மக்கள் வெளியேறும் பகுதியையும் எரிமலை குழம்பு மூடி விட்டது.
|
பிரச்சனை
இந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் வீடுகளை காலி செய்யும் போது அங்கே நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 5.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. எரிமலை வெடிப்பு காரணமாகவே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் எத்தனை பேர் காயமடைந்தார்கள், எத்தனை பேர் மரணமடைந்தார்கள் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.
|
500
இதில் அதிர்ச்சி அளிக்கும் தகவல் என்றால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அந்த எரிமலையை சுற்றிய 5 கிலோ மீட்டர் பகுதியில் 500 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு 24 மணி நேரத்தில் இவ்வளவு அதிகமான நிலநடுக்கம் எங்குமே ஏற்பட்டது இல்லை என்று கூறப்படுகிறது. இதே பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு 300 நிலநடுக்கம் ஏற்பட்டது. எல்லாமே மிகவும் சிறிய அளவிலான நிலநடுக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
|
மொத்தம் 8000 அடி உயரம்
இந்த நிலநடுக்கம் காரணமாக மொத்தம் 8000 அடி உயரத்திற்கு தூசுகளும், புழுதிகளும் பறந்துள்ளது. எரிமலையை சுற்றியுள்ள 15 கிலோ மீட்டர் பகுதி வரை புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. இந்த 8000 கிலோ மீட்டர் உயர புழுதியை சாட்டிலைட் படம் பிடித்து வெளியிட்டுள்ளது. இந்த எரிமலை குழம்பு புகைப்படங்களை உறைய வைக்கும் வகையில் உள்ளது.