For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காட்டுத்தீயில் நூலகத்தை காப்பாற்றிய 500 ஆடுகள்... ஆச்சர்ய தகவல்.. என்ன செய்தன தெரியுமா?

Google Oneindia Tamil News

லாஸ் ஏஞ்சல்ஸ்: கலிஃபோர்னியாவில் பயங்கரமாக பற்றி எரிந்த காட்டுத்தீயில் இருந்து அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன் பெயரில் உள்ள நூலகத்தை 500 ஆடுகள் காப்பாற்றி உள்ளன.

எப்படி ஆடுகள் நூலகத்தை காட்டுத்தீயில் இருந்து காப்பாற்றின என்பது குறித்து ஆச்சர்யமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நகரம் லாஸ் ஏஞ்சல்ஸ்.

காட்டுத்தீ

காட்டுத்தீ

இந்த நகரத்தின் அருகே சிமி பள்ளத்தாக்கு பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இந்த பகுதி அருகே வனத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத்தீ வீடுகள் இருக்கும் பகுதியை நெருங்க ஆரம்பித்தது.

பொதுமக்கள் தகவல்

பொதுமக்கள் தகவல்

இதை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக வென்சுரா கவுண்டியில் உள்ள தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அந்த பகுதியில் முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன் பெயரில், நூலகம் ஒன்று செயல்படுகிறது. அந்த நூலகம் தீயில் சிக்கும் நிலையில் இருந்தது.

புற்களை மேய்ந்தன

புற்களை மேய்ந்தன

இதையடுத்து அங்கிருந்தவர்கள் சமயோகிதமாக செயல்பட்டு உடனடியாக அருகில் இருந்த ஆட்டு மந்தையை திறந்துவிட்டு புற்கள் நிறைந்த வனத்தை மேய்ச்சலுக்கு விட்டனர். சுமார் 500 ஆடுகள் புற்களை மேய்ந்து அதன் உயரத்தை குறைத்தன. எளிதாக எரியக்கூடிய புதர்ச் செடிகளை ஆடுகள் தின்றதால், காட்டுத் தீயில் இருந்து நூலகம் காப்பாற்றப்பட்டது.

தீ அணைப்பு

தீ அணைப்பு

தீயணைப்பாளர்கள் வரும் வரையில் ஆடுகள் மேய்ந்த இடத்தில் தீ பரவாமல் இருந்தது. சுமார் 13 ஏக்கர் நிலத்தை ஆடுகள் மேய்ந்து அப்பகுதியை தீ விபத்தில் இருந்து பாதுகாத்தன. அதன்பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்து தீயை முழுமையாக அணைத்தனர்.

English summary
500 goats helped save the Ronald Reagan Presidential Library from wildfires in California.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X