For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குணம் அடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா.. 51 பேர் பாதிப்பு.. தென்கொரியாவில் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

சியோல்: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 51 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவர்கள் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் தொன்கொரியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளால் பாராட்டை பெற்ற நாடு தென்கொரியா. சீனா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட போது, அடுத்த சில வாரங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு தென்கொரியா.

ஆனால் அதிகப்படியான சோதனை, அதிவிரைவில் சோதனை முடிவுகளை அறிதல், தனிமைப்படுத்தல், சமூக விலகல் போன்றவற்றால் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை கட்டுப்படுத்தியது. இதனால் அங்கு உயிரிழப்பும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

10000 பேர் பாதிப்பு
தற்போதைய நிலையில் தென்கொரியாவில் சுமார் 10000 பேர்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 200 பேர் இது வரை உயிரிழந்துள்ளனர். இது மிக குறைவான சராரிசரியாகும். இந்நிலையில் தென்கொரியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான டாயிகு நகரில் கொரோனா வைரஸ் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்த 51 பேர் குணடைந்துவிட்டதாக அறிவித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கேம் சேஞ்சர்.. களமிறங்கிய பில்கேட்ஸ்.. உருவாக்கப்பட்டது 'INO-4800' கொரோனா தடுப்பூசி.. இன்று சோதனை! கேம் சேஞ்சர்.. களமிறங்கிய பில்கேட்ஸ்.. உருவாக்கப்பட்டது 'INO-4800' கொரோனா தடுப்பூசி.. இன்று சோதனை!

10000 பேர் பாதிப்பு

10000 பேர் பாதிப்பு

தற்போதைய நிலையில் தென்கொரியாவில் சுமார் 10000 பேர்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 200 பேர் இது வரை உயிரிழந்துள்ளனர். இது மிக குறைவான சராசரியாகும். இந்நிலையில் தென்கொரியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான டாயிகு நகரில் கொரோனா வைரஸ் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 51 பேர் குணமடைந்துவிட்டதாக அறிவித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மீண்டும் கொரோனா

மீண்டும் கொரோனா

எனினும் அவர்களை தனிமைப்படுத்தி தொடர்ந்து கண்காணித்து அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து வந்தனர். இந்நிலையில் 51 பேருக்கும் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனயில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வியக்கும் விஞ்ஞானிகள்

வியக்கும் விஞ்ஞானிகள்

இதுபற்றி தென்கொரியா மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இது வியப்பான விஷயம். மனிதனின் உடலில் பல்லாயிரம் கோடி செல்கள் உள்ளன. இதில் ஏதோ ஒரு செல்லில் பிரிக்க முடியாத அளவுக்கு கொரோனா வைரஸ் ஒட்டிக்கொண்டுள்ளது. குணம் அடைந்தவர்களையும் மீண்டும் தாக்க வாய்ப்பு உள்ளது என்று எச்சரித்தனர்.

மீண்டும் பாதிக்க வாய்ப்பு இல்லை

மீண்டும் பாதிக்க வாய்ப்பு இல்லை

ஆனால் இந்த தகவலை இங்கிலாந்து ஈஸ்ட் ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் தொற்று நோய்த்துறை பேராசிரியர் பால் ஹண்ட் கூறுகையில், இதில் பரிசோதனை முறைகள் தவறாக கையாளப்பட்டு இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பாதிக்கப்பட்டதாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. என்னை பொறுத்தவரை குணம் அடைந்த ஒருவர் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்பே இல்லை" என்றார்.

English summary
At least 51 patients diagnosed as having fully recovered from the coronavirus in South Korea have tested positive a second time after leaving quarantine
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X