For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

5ஜி தொழில்நுட்பம், தரவுகளை சேமிக்கும் விவகாரங்கள்.. பிரிக்ஸ் நாடுகளுடன் இந்தியா தீவிர ஆலோசனை

Google Oneindia Tamil News

ஒசாகா: ஜி 20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ள மோடி தரவுகளை சேமிப்பது மற்றும் 5ஜி நெட்வொர்க் போன்ற தொழில்நுட்ப விஷயங்களில் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் ஜப்பானை தவிர்த்து விட்டு, பிரிக்ஸ் நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

ஜி 20 மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள உலக தலைவர்கள் பலரையும் இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். முன்னதாக அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்த மோடி, ஈரான் விவகாரம் வர்த்தகம் பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு தரவுகளை சேமிக்கும் தொழில்நுட்பம், 5ஜி தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்து விவாதித்தார்.

5G Technology, Data Saving Matters.. India intensive consultation with BRICS countries

அப்போது மோடிக்கு பதிலளித்த ட்ரம்ப் தரவுகளை சேமிப்பதை உள்நாட்டிலேயே வைத்து கொண்டால் என்ன என்று பிரதமரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மோடி அதிருப்தியடைந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து தரவுகளை சேமிப்பது மற்றும் 5ஜி நெட்வொர்க் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களில், ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் உதவியை நாட முயற்சிப்பதை விட பிற வளர்ந்த நாடுகளிடம் பேச்சு நடத்த மோடி முடிவு செய்தார்.

இதனையடுத்து வர்த்தக சிக்கல்களை தீர்க்க அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் இணைந்து பேச்சு நடத்திய மோடி, தொழில்நுட்ப விவகாரங்கள் குறித்து பிரிக்ஸ் நாடுகளுடன் (பிரேசில்-ரஷ்யா-இந்தியா-சீனா-தென்னாப்பிரிக்கா) நெருங்கி ஆலோசனை நடத்தியுள்ளார்.

மேக் இன் இந்தியா திட்ட இலக்குகளை நிறைவேற்ற, 5ஜி தொழில்நுட்பம் வழங்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. பிரிக்ஸ் நாடுகளின் ஆலோசனைக்கு பின்னர் வர்த்தகத்திற்கும் - டிஜிட்டல் பொருளாதாரத்திற்கும் இடையே உள்ள முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறோம். வளர்ச்சிகளில் தரவுகளின் பங்கு இருப்பைதயும் உறுதிப்படுத்துகிறோம் என பிரிக்ஸ் குழுவால் அறிக்கை வெளியிடப்பட்டது.

மேலும் அந்த அறிக்கையில் வெளிப்படையான, பாகுபாடற்ற, திறந்த, இலவச மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சர்வதேச வர்த்தகத்திற்கு கடமைப்பட்டுள்ளதாக பிரிக்ஸ் நாடுகள் குறிப்பிட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் ஒருதலைபட்சம் என்ற பெயரில் பல நடைமுறைகள் உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு எதிராக உள்ளன என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே, உலக வர்த்தக அமைப்பினுள் உள்ள தரவு குறித்த விதிகளை வகுக்க வேண்டியது அவசியமாகிறது என குறிப்பிட்டார். தொழில்நுட்ப விவகாரங்களில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் "வளரும் நாடுகளின் தேவைகளை" கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஜப்பான் பிரதமர் அறிவித்த முன்முயற்சியான டேட்டா ஃப்ரி ஃப்ளோ வித் ட்ரஸ்ட் திட்டத்திற்கு பிறகு பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட அனைத்து நிதி தரவுகளையும் சேமித்து வைக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் அறிவிக்கப்பட்டது.

இதற்கு கூகுள், மாஸ்டர்கார்டு, விசா மற்றும் அமேசான் போன்ற முக்கிய நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது இது ஒரு கட்டணமில்லாத தடை என்று கூறியதால் இது வர்த்தக பதற்றங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Modi, who has gone to Japan to attend the G20 summit, has emphasized the BRICS countries, excluding the US and Japan, which have developed technical issues such as storing data and the 5G network....
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X