For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரீஸ் நாட்டை உலுக்கி சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. கட்டிடங்கள் சரிந்து விழுந்ததில் 10 பேர் படுகாயம்

கிரீஸில் லெஸ்போஸ் கடற்கரையையொட்டிய பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் சரிந்தன. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்ரில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.

கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் கடற்கரை நகரமான ப்ளோமாரியின் தெற்கில் இருந்து 5 கி.மீ தொலைவில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

 6.3-magnitude quake rocks Turkey, Greek islands, 10 injured

பிற்பகலில் ஏற்பட்ட நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. சுமார் 2 நிமிடங்கள் தொடர்ந்து நீடித்த நிலநடுக்கத்தால், ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கிய 10 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலநடுக்கம் துருக்கி, இஸ்தான்புல், ஏதென்சிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
At least 10 people were hurt when a strong 6.3-magnitude earthquake struck the Aegean coast of western Turkey and the Greek islands of Lesbos and Chios on Monday, Greece's ERT state TV reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X