For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கணவனும் மனைவியும் வாரத்துக்கு இத்தனை நாள் 'அது' பண்ணனும்.. சக்சஸ் டிப்ஸ் சொல்வது அலிபாபா நிறுவனர்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா, மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா, அப்படியானால் 669 ஃபார்முலாவை ஃபாலோ பண்ணுங்க என கூறியுள்ளார், அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர், ஜேக் மா.

உலகின் முன்னணி தொழிலதிபரும், சீனாவின் மிகப்பெரும் செல்வந்தருமான ஜேக் மா, சமீபத்தில், பணியிடத்தில் எப்படி பணியாற்றினால், சிறப்பாக இருக்கும் என்று அட்வைஸ் செய்தவர்.

669: Alibaba founder Jack Ma given advice for an improved life

அவரது கருத்துப்படி, 996 என்ற ஃபார்முலாப்படி வேலை பார்க்க வேண்டுமாம். அதாவது, வாரத்தில் 6 நாட்கள், காலை 9 மணி முதல், இரவு 9 மணிவரை பணியிடத்தில், பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு அவர் வைத்த பெயர் ஸ்ப்ரிட் ஆப் 669. ஆனால், தொழிலாளர் நலன் சார்ந்த விதிமுறைகளை மீறி சுய லாபத்திற்காக ஜேக் மா இப்படி பேசுவதாக சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில், இப்போது வேறு ஒரு செம ஐடியாவோடு வந்துள்ளார் ஜேக் மா. தனது நிறுவனத்தின் ஊழியர்களின் கூட்டு திருமண விழாவில் பங்கேற்று பேசிய ஜேக்மா, கணவன்-மனைவி 669 என்ற ஃபார்முலாவை பின்பற்றினால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறியுள்ளார்.

தமிழிசைக்கு அரசியல் பக்குவம் இல்லை.. பொய் சொல்றதுல்ல மோடியை மிஞ்சிவிட்டார்.. ஆர் எஸ் பாரதி தமிழிசைக்கு அரசியல் பக்குவம் இல்லை.. பொய் சொல்றதுல்ல மோடியை மிஞ்சிவிட்டார்.. ஆர் எஸ் பாரதி

அதாவது, வாரத்தில் 6 நாட்கள், 6 முறை நல்ல கால அவகாசத்தோடு செக்ஸ் வைத்துக்கொண்டால் வாழ்க்கை சிறக்கும் என வாழ்த்துரை வழங்கியுள்ளார். இதனிடையே, சமூக வலைத்தளத்தில் ஜேக் மா ஃபார்முலாக்களை நெட்டிசன்கள் கேலி செய்ய தொடங்கியுள்ளனர்.

காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை ஆபீசில் வேலை பார்த்துவிட்டு, 6 நாட்களுக்கு செக்சும் வைக்கும் அளவுக்கு தெம்பு இல்லைப்பா என புலம்புகிறார்கள் நெட்டிசன்கள்.

English summary
Alibaba founder Jack Ma has given advice for an improved life, that, Follow the spirit of "669" sex for six days, six times, with duration being the key.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X