For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு

Google Oneindia Tamil News

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளதால் சேதம் சற்று அதிகமாக உள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் போண்டாகைடன் நகரில் இருந்து தென்கிழக்கே, அதாவது அந்த நகரில் இருந்து 219 மீட்டர் தொலைவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நில நடுக்கம் 139 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

7.0 quake hits Philippine Islands region

பிலிப்பைன்ஸ் நாட்டை பொறுத்தவரை தவாயோ என்ற நகரமானது முக்கிய வணிக நகரமாக உணரப்படுகிறது. இந்த நகரத்திலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ரிக்டர் அளவில் 7.0 ஆக நில நடுக்கம் அளவிடப்பட்டுள்ளதால் சேதாரங்கள் சற்று அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.

தவாயோ, போண்டாகைடன் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் கட்டிடங்கள் குலுங்கியிருக்கின்றன. வீடுகள் ஆட்டம் கண்டதால் வீதிக்கு அலறல் சத்தத்துடன் மக்கள் ஓடி வந்திருக்கின்றனர். இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணியளவில் பிலிப்பைன்ஸில் இந்த சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.

கடுங்குளிரில் இறக்கிவிடப்பட்ட தாய்.. விஸ்வரூபம் எடுத்த மக்கள் போராட்டம்.. மங்கோலிய பிரதமர் ராஜினாமாகடுங்குளிரில் இறக்கிவிடப்பட்ட தாய்.. விஸ்வரூபம் எடுத்த மக்கள் போராட்டம்.. மங்கோலிய பிரதமர் ராஜினாமா

நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இதற்கு முன்னர் ஏற்பட்ட நில நடுக்கத்தை காட்டிலும் இன்று சற்று சக்தி வாய்ந்தது என்பதால் சேதாரம் அதிகம் இருக்கக்கூடுமோ என அஞ்சப்படுகிறது.

English summary
7.0 quake hits Philippine Islands region
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X