For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிலியில் 7.7 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது... சுனாமி எச்சரிக்கை வாபஸ் #puertomontt

சிலி நாட்டில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இருப்பினும் பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது.

Google Oneindia Tamil News

சான்டியாகோ: சிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு 7.7 ரிக்டராக பதிவானது.

தெற்கு சிலியில் உள்ள பியூர்டோ மான்ட்டுக்கு தென் மேற்கே 1240 மைல் தூரத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 7.7 magnitude earthquake rocks Chile, triggers tsunami warning

பூமிக்குக் கீழே 15 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இருப்பினும் பின்னர் அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. சேத விவரம் குறித்துத் தெரியவில்லை.

லாஸ் லாகோஸ் பகுதி முழுவதும் கடலோரத்தில் வசித்து வரும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த சிலி தேசிய அவசர நிலை துறை உத்தரவிட்டுள்ளது.

பயோபியோ, அரகசினா, லாஸ் ரியோஸ், அய்சன் பகுதிகளைச் சேர்ந்த மக்களும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

நிலநடுக்கம் காரணமாக 3 மீட்டர் அளவிலான சுனாமி அலைகள் எழும்பக் கூடும் என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்திருந்தது. இருப்பினும் பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது.

நிலநடுக்கத்தின் மையம் இருந்த பகுதிக்கு அருகில் உள்ள குல்லான் என்ற நகரம்தான் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

English summary
A 7.7 magnitude earthquake has rocked Chile and it has triggered Tsunami warning in the South American nation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X