For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லைப் ஸ்டைல் மாற்றத்தால் இளம்பெண்களுக்கும் ஹார்ட் அட்டாக்... தவிர்க்க 6 டிப்ஸ்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இளம்பெண்களின் 75 சதவீத மாரடைப்பு நோய்க்கு தவறான வாழ்க்கை முறை தான் முக்கிய காரணம் என ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளது.

வயதானவர்களுக்கு மட்டுமே வரும் நோய்களில் ஒன்று என முன்னர் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மாரடைப்பு, தற்போது வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் தாக்குகிறது. இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணம் வாழ்க்கை முறை மாற்றமே ஆகும்.

75% of heart attacks in young people are due to lifestyle choices - and could be avoided by following six simple rules

அதிலும், குறிப்பாக சமீபகாலமாக இளம்வயது பெண்கள் மாரடைப்பு நோயால் பாதிக்கப் படுகின்றனர். இது தொடர்பாக அமெரிக்காவில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் மூலம் ஆறு விதமான வாழ்க்கை வழி முறைகளைப் பின்வற்றுவது இதயத்திற்கு நல்லது எனத் தெரியவந்துள்ளது.

அந்த ஆறு வாழ்க்கை முறைகளாவன:-

- புகை பிடிக்காமல் இருப்பது.

- ஆரோக்கியமான எடையை பராமரிப்பது.

- வாரத்திற்கு 150 நிமிடங்களாவது உடற்பயிற்சி மேற்கொள்வது வாரத்தில் ஏழு மணி நேரத்திற்கு மேல் டி.வி பார்க்காமல் இருப்பது.

- ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு முறை மது அருந்துவது.

- ஆரோக்கியமான உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடிப்பது.

- இதோடு இன்னொரு கூடுதல் விதியும் உண்டு. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே டி.வி பார்க்க வேண்டும். காரணம் ஸ்பெயினில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், அதிக நேரம் டி.வி பார்ப்பவர்கள் சிறு வயதில் இறந்து போவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக உறுதிபடுத்தியுள்ளது.

மேற்கூறிய இந்த ஆறு வழிமுறைகளை தங்கள் வாழ்வில் கடைபிடிக்கும் பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு 92 சதவீதம் குறைவதாகவும், இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 66 சதவீதம் குறைவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், தினமும் மிதமான அளவு மது அருந்தும் பெண்களுக்கு, அதிகமாக மது அருந்துபவர்கள் மற்றும் மதுவே அருந்தாதவர்களை விட நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆய்வு தொடர்பாக இண்டியானா பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் சோமிஸ்டிக் கூறுகையில், ‘இது ஒரு முக்கியமான பொது சுகாதார செய்தி , பெண்கள் இந்த வழிமுறைகளை தங்கள் இளைய வயதிலேயே தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது எதிர்காலத்தில் இதய நோய்களை தடுப்பதற்கான எளிய வழி என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

English summary
Three out of four heart attacks in young women could be prevented if they closely followed six healthy lifestyle rules, researchers say. The rules are: not smoking, maintaining a healthy weight, doing at least 150 minutes of physical activity per week, watching no more than seven hours of TV each week, having a maximum of one drink per day and sticking to a healthy diet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X