For Daily Alerts
Just In
அலாஸ்காவில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டரில் 8.1 ஆக பதிவு
அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 8.1 ஆக பதிவாகி இருந்தது.
அமெரிக்கா மாகாணங்களில் ஒன்றான அலாஸ்கா அருகே இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அமெரிக்கா, கனடா நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனால் கடலோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்போது சுனாமி ஏற்படாது என்று கூறப்பட்டு இருக்கிறது.
Tue Jan 23 10:07:47 UTC 2018 event picture pic.twitter.com/qeKKqFTysB
— NWS Tsunami Alerts (@NWS_NTWC) January 23, 2018
மக்கள் சுனாமி குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என்று அந்நாட்டு அரசு குறிப்பிட்டு இருக்கிறது. சுனாமி பாதிப்பு ஏதும் நாட்டுக்கு இல்லை என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.