For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பூமியைப் போன்ற ஆயிரம் கோடி கிரகங்கள்... கெப்ளர் மூலம் கண்டறியப் பட்டதாக தகவல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பூமியின் பால்வெளி விண்மண்டலத்தில் உயிரினங்கள் வாழத்தக்க ஆயிரம் கோடி கிரகங்கள் உள்ளதாக நாசாவின் தொலைநோக்கியான கெப்ளர் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்டவெளியில் உள்ள தகவல்கள் பற்றி ஆராய்வதற்காக அனுப்பப் பட்ட கெப்ளர் தொலைநோக்கி தந்த தகவல்களின் அடிப்படையில் இத்தகவல் தெரிய வந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

கெப்ளர் தொலைநோக்கி....

கெப்ளர் தொலைநோக்கி....

கடந்த 2009 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசா நிறுவனம் கெப்ளர் தொலைநோக்கியை விண்ணில் நிலை நிறுத்தியது. இந்த தொலைநோக்கி மூலம் பெறப்பட்டுள்ள தகவல்கள் தற்போது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

நாசா தகவல்...

நாசா தகவல்...

அதில், பூமியைப் போன்றே உயிரினங்கள் வாழத்தக்க ஆயிரம் கோடி கிரகங்கள் பால்வெளியில் உள்ளதாக, கெப்ளர் தொலைநோக்கி மூலம் கிடைத்த தகவல்களை ஆராய்ந்ததில் தெரியவந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

உயிர் வாழத் தக்க கிரகங்கள்....

உயிர் வாழத் தக்க கிரகங்கள்....

மேலும், நமது சூரியனை போன்ற ஏராளமான சூரியன்கள் இந்த விண்வெளி மண்டலத்தில் அமைந்திருப்பதும், இவற்றில் 5 சூரியன்களுக்கு ஒன்று வீதம், உயிரினங்கள் வாழத்தக்க கிரகங்கள் இருப்பதும் இந்த ஆய்வில் அறிய வந்துள்ளதாம்.

1000 கோடி கிரகங்கள்...

1000 கோடி கிரகங்கள்...

இதனை மொத்தமாக கணக்கில் கொண்டால், பால்வெளி மண்டலம் முழுவதிலும் சுமார் ஆயிரம் கோடி கிரகங்கள் பூமியைப்போன்றே, உயிரினங்கள் வாழக்கூடிய சூழ்நிலை கொண்டதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அத்தியாவசியமான சூழல்....

அத்தியாவசியமான சூழல்....

இக்கிரகங்களில் திரவடிவ நீர், காற்று போன்ற வாழ்க்கைக்கு அத்தியாவசியமான சூழல் நிலவுவதாக கெப்ளர் ஆய்வு தலைமை விஞ்ஞானி எரிக் பெடிகுரா தெரிவித்துள்ளார்.

துணை கிரகங்களுடன்...

துணை கிரகங்களுடன்...

மேலும், அண்டவெளியில் உள்ள சூரியன்களில் 22 சதவீத நட்சத்திரங்களுக்கு பூமியைப் போன்ற துணை கிரகங்கள் இருப்பதாக ஆய்வை மேற்கோள்காட்டியுள்ளார் எரிக்.

பூமியை ஒத்த கிரகங்கள்...

பூமியை ஒத்த கிரகங்கள்...

கெப்ளர் தொலைநோக்கி இதுவரை 3 ஆயிரத்து 538 பூமி போன்ற கிரகங்களை கண்டறிந்ததில், 647 கிரகங்கள் பூமியின் அளவை ஒத்திருக்கின்றன என்று தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
A study finds the Milky Way is teeming with billions of planets that are about the size of Earth, orbit stars just like our sun, and exist in the Goldilocks zone – not too hot and not too cold for life. Astronomers using NASA data have calculated for the first time that in our galaxy alone, there are at least 8.8 billion stars with Earth-size planets in the habitable temperature zone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X