For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேபாள மக்களுக்காக ரூ. 1 லட்சத்து 66 ஆயிரம் நிதி திரட்டிக் கொடுத்த 8 வயது சிறுவன் ”நீவ் சரஃப்”

Google Oneindia Tamil News

அமெரிக்கா: நிலநடுக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைப்புகள் மற்றும் ஐ.நா உதவி வரும் நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த 8 வயது சிறுவன் தன்னந்தனியாக 1 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டிக் கொடுத்துள்ளான்.

அமெரிக்காவின் மேரிலேண்டைச் சேர்ந்த 8 வயது சிறுவன் நீவ் சரஃப். நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தான்.

8-year-old Neev Saraf from Maryland raises $25,000 for victims of Nepal earthquake

காரணம் அது அவனது பெற்றோரின் தாய்நாடு. அவர்கள் சிறுவயதில் அங்குதான் வசித்து வந்துள்ளனர். இதனால், நேபாள மக்களுக்கு தன்னால் முடிந்த உதவி செய்ய வேண்டும் என்று நினைத்த சிறுவன், தான் சேமித்து வைத்திருக்கும் உண்டியலை உடைத்து 384 டாலரை 24 ஆயிரம் ரூபாய் எடுத்தான்.

மேலும் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்று அனைவரிடமும் நேபாள மக்களுக்காக உதவி கேட்டு நிதி திரட்டினார்.

நிதி திரட்டும் இணையதளத்தில் இதற்காக ஒரு தனி பக்கத்தை தொடங்கி தன்னந்தனியாக 26 ஆயிரத்து 675 டாலர் சுமார் 1 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டியுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணத்தை நேபாளத்தில் தன்னலமின்றி சேவை செய்து வரும் தொண்டு நிறுவனங்களுக்கு கொடுத்து சிறுவன் உதவ உள்ளான்.

English summary
neev Saraf, the eight-year-old boy from Laurel, Maryland, who made it his mission to raise at least $25,000 for victims of the Nepalese earthquakes, has achieved his goal less than halfway into his fundraiser’s allotted time span.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X