For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உணவின்றி கிர்கிஸ்தானில் சிக்கி தவிக்கும் மருத்துவ மாணவர்கள்.. விரைந்து மீட்க கண்ணீருடன் கோரிக்கை

Google Oneindia Tamil News

கிர்கிஸ்தான்: கிர்கிஸ்தானில் தங்கி மருத்துவம் படித்து வரும் 800 மாணவர்கள் கொரோனா லாக்வுடனால் சொந்த நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். தங்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended Video

    உணவின்றி கிர்கிஸ்தானில் சிக்கி தவிக்கும் மருத்துவ மாணவர்கள்.. விரைந்து மீட்க கண்ணீருடன் கோரிக்கை - வீடியோ

    கிர்கிஸ்தானில் பிஸ்ஹெக் நகரில் உள்ள 4 பல்கலைக்கழகங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 800 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். கொரோனா பாதிப்பால் கிர்கிஸ்தானில் லாக்டவுன் அமலில் உள்ளது.

    வெளிநாடுகளில் சிக்கியுள்ளோர் வந்தே பாரதம் திட்டத்தின் கீழ் மீட்கப்பட்டு வருகிறார்கள். அது போல் கிர்கிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு 3 விமானங்கள் இயக்கப்பட்டன. இவை கொச்சி, டெல்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு மட்டுமே இயக்கப்பட்டன.

    பொருளாதாரத்தை தீவிரமாக அழித்து வருகிறது மத்திய அரசு.. ராகுல் காந்தி கடும் தாக்கு பொருளாதாரத்தை தீவிரமாக அழித்து வருகிறது மத்திய அரசு.. ராகுல் காந்தி கடும் தாக்கு

    கிர்கிஸ்தான்

    கிர்கிஸ்தான்

    சென்னைக்கு இயக்கப்படவில்லை. இதனால் கிர்கிஸ்தானில் இருந்து தமிழகத்திற்கு திரும்ப முடியாத நிலையில் மாணவர்கள் இருக்கிறார்கள். உணவு, தண்ணீர் சரிவர கிடைக்கவில்லை என புகார் அளிக்கிறார்கள். மேலும் மாஸ்க், கையுறை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் கிடைக்கவில்லை என்கிறார்கள்.

    மீட்க கோரிக்கை

    மீட்க கோரிக்கை

    எங்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீடியோவில் கோரிக்கை விடுத்துள்ளார்கள். அந்த வீடியோவில் அவர்கள் கூறுகையில், கிர்கிஸ்தானில் 800 பேர் தவித்து வருகிறோம். இந்திய தூதரகத்தை அணுகினால் தமிழக அரசிடம் பேசுமாறு கூறுகிறார்கள். எனவே சென்னை அல்லது கோவை அல்லது திருச்சிக்கு நேரடியாக கிர்கிஸ்தானிலிருந்து விமானங்களை இயக்கி எங்களை மீட்க வேண்டும்.

    கண்ணீர் கோரிக்கை

    கண்ணீர் கோரிக்கை

    தற்போதைக்கு தமிழக அரசு மட்டுமே எங்கள் நம்பிக்கையாகும். நாங்கள் படிக்கும் பல்கலைக்கழகங்களும் கைவிரித்து விட்டன. எனவே எங்களை எப்படியாவது மீட்டு எங்கள் பெற்றோருடன் சேர்க்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

    தொழிலாளர்கள்

    தொழிலாளர்கள்

    இது போல் அரபு நாடுகளிலிருந்து தொழிலாளர்கள் தங்களை தமிழகத்திற்கு மீட்க கோரிக்கை விடுத்துள்ளார்கள். உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இல்லை. நிறுவனத்தில் உள்ளவர்கள் எங்களை சொந்த ஊருக்கு அனுப்புமாறு கேட்டால் தாக்குகிறார்கள் என அரபு நாடுகளிலிருந்து தொழிலாளர்கள் அழுது கொண்டே கூறினார்கள்.

    English summary
    800 more Tamilnadu Medical students stranded in Kyrgyzstan. They are struck in Bishkek.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X