For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக்தாத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் பயங்கர தற்கொலைப்படைத் தாக்குதல்- 83 பேர் பலி

Google Oneindia Tamil News

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இரண்டு இடங்களில் நடத்திய பயங்கர கார் வெடிகுண்டுத் தாக்குதலில் 83 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பாக்தாத் நகரில் மக்கள் நெரிசல் மிகுந்த மார்க்கெட் பகுதிகளில் இந்த சம்பவம் நடந்தது. ரமலான் நோன்பு தொடர்பான வர்த்தகத்தில் மக்களும், வியாபாரிகளும் இருந்ததைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் இந்த கொடூரத் தாக்குதலை மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலுக்கு நாங்களே பொறுப்பு என்று ஐஎஸ் அமைப்பு கூறியுள்ளது.

83 killed in Iraq IS car bombing

கர்ரடா மாவட்டத்தில் முதல் தாக்குதல் நடந்தது. அதேபோல அதற்கு அருகில் உள்ள இன்னொரு மார்க்கெட்டிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இரண்டு சம்பவங்களையும் கார் வெடிகுண்டுகள் மூலம் தீவிரவாதிகள் நடத்தினர்.

83 killed in Iraq IS car bombing

இந்தத் தாக்குதலில் சிக்கி கடைகள் தீப்பிடித்து எறிந்தந. மேலும் பொருட்கள் வெடித்துச் சிதறி விழுந்தன.அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காணப்பட்டது. ரமலான் மாதம் என்பதால் நோன்பு தொடர்பாகவும், பண்டிகை தொடர்பாகவும் பர்ச்சேஸிங்கில் மக்கள் பெருமளவில் ஈடுபட்டிருந்ததைப் பயன்படுத்தி இந்த கொடும் செயலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர்.

English summary
83 perosn have been killed in Iraq ISIS car bombing in the capital Bagdhad today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X