For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

84 வயதில் தாத்தாவுக்கு வந்த "ஆசை".. கடைசியில் பணத்தை இழந்து நின்ற பரிதாபம்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: நியூயார்க்கைச் சேர்ந்த 84 வயது முதியவர், 17 வயதான இரட்டைச் சகோதரிகளுடன் ஜாலியாக இருக்க விரும்பினார். ஆனால் கடைசியில் அவர்களிடம் தனது பணத்தைப் பறி கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

அந்த இரு சகோதரிகளும் முதியவரின் கை கால்களைக் கட்டிப் போட்டு விட்டு தாத்தாவிடமிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டனர். தற்போது அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரையும் போலீஸார் கைதும் செய்துள்ளனர்.

84 year od's Date with Teen twins turns into nightmare

அந்த தாத்தாவின் பெயர் பால் அரோன்சன். 84 வயதாகும் அவர் 17 வயதான ஷாய்னா போஸ்டர் என்ற இளம் பெண்ணை கடந்த மாதம் ஒரு இணையதளம் மூலம் சந்தித்தார். இது டேட்டிங் சைட்டாகும். பின்னர் இருவரும் நட்போடு பழகி வந்தனர். சமீபத்தில் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். அப்போது ஷாய்னா தனது இரட்டை சகோதரியான ஷாலின் என்பவரையும் கூட்டி வந்திருந்தார்.

மூன்று பேரும் ஒரு ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டுள்ளனர். பின்னர் மீண்டும் அரோன்சனின் வீட்டுக்குத் திரும்பினர். அங்கு மது அருந்தினர். அதன் பிறகு நிலைமை வேறு மாதிரியாக மாறியது. சகோதரிகளுடன் ஜாலியாக இருக்க விரும்பியுள்ளார் தாத்தா. சில செயல்களைச் செய்யச் சொல்லியுள்ளார். ஆனால் சகோதரிகள் அதற்கு மறுத்து விட்டனர்.

இதுகுறித்து ஷாய்னா கூறுகையில், எங்களுக்குப் பிடிக்காததை செய்யச் சொன்னார் அவர். அவர் பார்க்கவே அசிங்கமாக இருந்தார். வயதானவர் வேறு. எங்களுக்கு வாந்தி வருவது போல இருந்தது.

இதனால் அவரது கை, கால்களைக் கட்டிப் போட்டோம். பின்னர் வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு போய் விட்டோம் என்று கூறியுள்ளார்.

போகும்போது தாத்தாவின் கிரெடிட் கார்டையும் எடுத்துப் போன சகோதரிகள், வழியில் அதை வைத்து மேக்கப் சாதனங்களை வாங்கினராம்.

இந்த சகோதரிகள் மீது கடத்தல், திருட்டு, வழிப்பறி, தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

English summary
A 84 year old elder's Date with Teen twins turned into nightmare in US's New York and he lost his money to the sisters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X