For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரிக்கெட் ரசிகர்களை குஷிப்படுத்திய சாரு பாட்டி.. ஸ்பான்சர் செய்ய முன்வந்த ஆனந்த் மஹிந்திரா!

Google Oneindia Tamil News

Recommended Video

    Elderly indian fan: Ind Vs Ban: இந்திய வீரர்களை ஆசிர்வதித்த 87 வயது இந்திய ரசிகை- வீடியோ

    லண்டன்: இந்தியா - வங்கதேசம் இடையில் மிக விறுவிறுப்பாக நடைபெற்ற உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் விசிலடித்து ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்திய, 87 வயதான மூதாட்டி பற்றி செய்திகள் தான் இணையதளத்தில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.

    இந்நிலையில் ஒரே நாளில் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் கவர்ந்த மூதாட்டிக்கு, பிரபல இந்திய தொழிலதிபரான ஆனந்த் மகேந்திரா எஞ்சியுள்ள இந்திய போட்டிகளை கண்டு களிக்க ஸ்பான்ஸர் வழங்க போவதாக அறிவித்துள்ளார்.

    87 years old lady Excited at the cricket ground.. will Ticket Sponsor by Anand Mahendra

    உலகக்கோப்டை கிரிக்கெட்டில் தொடர்ந்து சதமடித்து அசத்தி வரும் ரோகித் ஷர்மாவை அடுத்து, மக்களது மனங்களை கவர்ந்தவராக உள்ளார் அந்த 87 வயதான சாருலதா பட்டேல் என்ற மூதாட்டி. மிகவும் விறுவிறுப்பான போட்டியின் இடையேயும், அனைத்து வீடியோ கேமராக்களும் சாருலதா படேலையும், அவரது ஆர்பரிப்பு மிக்க உற்சாகத்தையும் கவர் செய்ய தவறவில்லை.

    வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்க மைதானத்துக்கு வந்தார் மூதாட்டி சாருலதா. பல இளம் ரசிகர்கள் போலவே, தேசிய கொடியை கன்னத்தில் வரைந்து கொண்டு, கையில் தேசிய கொடியை ஏந்திக் கொண்டு கிரிக்கெட் போட்டியை கண்டு களித்தார். இந்தப் போட்டியில், வங்கதேச அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. போட்டி முடிந்த பின் கேப்டன் விராட் கோலி, நேற்றைய போட்டியில் சதம் விளாசிய துணை கேப்டன் ரோஹித் சர்மா இருவரும், அந்த மூதாட்டியிடம் ஆசிர்வாதம் வாங்கினர்.

    டீம் இந்தியாவை கேலரியிலிருந்து இருந்து உற்சாகப்படுத்திய சாருலதா பட்டேல் பலரது இதயத்தை வென்றுள்ளார். இணையம் முழுக்க அவரது படங்கள் வைரலாக பரவியது, பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தையும் சாருலதா பட்டேல் தொடர்பான தகவல் மற்றும் புகைப்படங்கள் ஈர்த்தது.

    இதனை தொடர்ந்து பிரபல தொழிலதிபரான ஆனந்த் மகேந்திரா, சாருலதா பட்டேல் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். எனக்கு கிரிக்கெட் போட்டியை பார்க்கும் பழக்கமில்லை. ஆனால் சமூகவலைதளங்களில் உலா வரும் உற்சாகமிக்க மூதாட்டியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து எனக்கும் உற்சாகம் பீறிட்டுள்ளது.

    இதனையடுத்து எனது நடைமுறையை மாற்றிக் கொண்டு கிரிக்கெட் போட்டியை பார்க்க எனது டிவி சேனலை மாற்ற போகிறனே் என பதிவிட்டார். மேலும் சாருலதா பட்டேலை பார்க்க ரசிகை போலவே தெரியவில்லை. அவரே என்னவோ கிரிக்கெட் விளையாடி போட்டி விளையாடுவது போல காணப்படுகிறார் என மிகவும் பாராட்டி பதிவிட்டார் ஆனந்த் மநே்திரா.

    பின்னர் பரபரப்பான போட்டியின் இறுதி நிமிடங்களுக்கு பிறகு வங்கதேசத்தை 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இதன் பின்னர் மீண்டும் ஆனந்த் மகேந்திரா ஒரு ட்விட் செய்தார். அதில் "போட்டியில் வென்ற பெண்மணி"-யை மீண்டும் பாராட்டினார்

    அவரை தேடி கண்டுபிடித்து, எஞ்சியுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ள போட்டிகளுக்கான டிக்கெட் தொகையை சாருலதா பட்டேலுக்கு ஸ்பான்சர் செய்ய போவதாகவும் உறுதி தெரிவித்துள்ளார்.

    English summary
    Anand Mahendra, the well-known Indian businessman, has announced that he will be sponsoring the remainder of the Indian competition to entertain the cricketer who has attracted all cricket fans overnight.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X