For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தான் ராணுவ வாகனம் மீது தற்கொலைப்படை தாக்குதல்.. 9 பேர் பலி.. அதிர்ச்சியில் அண்டை நாடு

Google Oneindia Tamil News

Recommended Video

    பாகிஸ்தான் ராணுவ வாகனம் மீது தற்கொலைப்படை தாக்குதல்- வீடியோ

    இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இந்திய சிஆர்பிஎப் படை வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அதில் அ்கமது தார் என்பவன், தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 40 வீரர்கள் பலியாகினர்.

    இந்த நிலையில் இதே போன்ற ஒரு சம்பவம் பாகிஸ்தான் நாட்டிலும் அரங்கேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பாகிஸ்தான் ராணுவம்

    பாகிஸ்தான் ராணுவம்

    'தி பலுசிஸ்தான் போஸ்ட்' என்ற பத்திரிகையில் இந்த செய்தி வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் ரோந்து வாகனங்கள் மீது தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் 9 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 11 பேர் காயமடைந்ததாகவும் அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது. சீனா-பாகிஸ்தான் பொருளாதார காரிடார் சாலை பகுதியிலுள்ள துர்பாத் மற்றும் பஞ்ச்கூர் நடுவேயான இடத்தில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது.

    பிரிவினைவாத அமைப்பு

    பிரிவினைவாத அமைப்பு

    இந்திய சிஆர்பிஎப் படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய பாகிஸ்தான் பதிலடியாக தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. பலுசிஸ்தான் பிரிவினைவாத தீவிரவாத அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.

    தீவிரவாத அமைப்பு

    தீவிரவாத அமைப்பு

    காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பினருக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படும் பலுசிஸ்தான், தீவிரவாத அமைப்பினரை, இந்திய உளவு அமைப்பான 'ரா' பயன்படுத்தி, பாகிஸ்தான் மீது பதிலடி தாக்குதல்களை அரங்கேற்றி வருவதாக, அந்த நாடு குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தான் அதிர்ச்சி

    பாகிஸ்தான் அதிர்ச்சி

    பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலுக்கு பலோச் ராஜி அஜோய் சாங்கர் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக பலுசிஸ்தான் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலால் பாகிஸ்தான் அதிர்ச்சியடைந்துள்ளது.

    English summary
    The Balochistan Post says, the Baloch Raji Ajoi Sangar (BRAS) have claimed responsibility for the attack between Turbat and Panjgur, on China Pakistan Economic Corridor (CPEC) route.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X