For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடுத்தது பெண் அதிபர் தான் வேண்டும்... இது 92 % அமெரிக்கர்களின் ஆசை!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவின் புதிய அதிபராக பெண் ஒருவர் பதவி ஏற்க வேண்டும் என 92 சதவீத அமெரிக்கர்கள் விரும்புவது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

அடுத்தாண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் ஜனநாயகக் கட்சி சார்பில் களமிறங்குகிறார். இதேபோல், குடியரசுக் கட்சி சார்பில் கார்லி பியோரினா என்ற பெண் தொழிலதிபரும் போட்டியிடுகிறார்.

ஏற்கனவே, ஹிலாரிக்கு மக்களிடையே அதிக ஆதரவு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சமீபத்திய ஆய்வு ஒன்றின் மூலம் ஹிலாரியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆய்வு...

ஆய்வு...

காலப் இந்த ஆய்வை நடத்தியுள்ளது, கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை தொலைபேசி பேட்டி மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில், அமெரிக்காவின் அனைத்து மாகாணங்கள் மற்றும் கொலம்பியாவில் வாழும் 1527 பேர் பங்கேற்றனர்.

அடுத்த அதிபர்...

அடுத்த அதிபர்...

இதில் அமெரிக்காவின் அடுத்த அதிபர் குறித்த மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து கேள்வி கேட்கப் பட்டது. அவற்றிற்கு மக்கள் அளித்த பதிலின் அடிப்படையில் பின்வரும் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

பெண் அதிபர்...

பெண் அதிபர்...

அதன்படி, அமெரிக்காவின் அடுத்த அதிபராக பெண் ஒருவர் பதவியேற்பதையே அங்கு வாழும் 92 சதவீதமான மக்கள் விரும்புவது தெரிய வந்துள்ளது.

 கே அதிபர்...

கே அதிபர்...

அதற்கு அடுத்த இடத்தில் கே எனும் ஓரினச் சேர்க்கையாளர் அதிபரை 74 சதவீத மக்கள் விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்தவர்...

கிறிஸ்தவர்...

மேலும், 73 சதவீதம் அமெரிக்கர்கள் தங்களது அடுத்த அதிபராக கிறிஸ்தவரே பதவியேற்க வேண்டும் என்றும், 60 சதவீதம் இஸ்லாமியர் பதவியேற்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஜான் கென்னடி...

ஜான் கென்னடி...

அமெரிக்காவில் கத்தோலிக்க கிறிஸ்தவர் ஒருவர் அதிபர் பதவிக்கு வந்தது ஜான் கென்னடி அதிபரானபோதுதான்.

நாத்திகர்...

நாத்திகர்...

இதேபோல், 58 சதவீதம் அமெரிக்கர்கள் நாத்திகர் ஒருவர் அடுத்த அதிபராக வேண்டும் என்றும், 47 சதவீதம் பேர் சோசியலிஸ்ட் பதவியேற்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

முதல் பெண் அதிபர்...

முதல் பெண் அதிபர்...

அமெரிக்க மக்களின் விருப்பப் படியே அங்கு அடுத்த அதிபராக பெண் ஒருவர் பதவியேற்றால், அவர் தான் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமைக்கு உரியவராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A opinion poll says that, the American people wants a woman as a next president.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X