For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பயங்கரமான காட்டுக்குள் சிக்கி தவித்த 2 வயது குழந்தை.. தில்லாக காப்பாற்றிய 78 வயது முதியவர்

மூன்று நாள் அடர்ந்த காட்டுக்குள் சிக்கிக்கொண்டு, உயிர்க்கு போராடிய 2 வயது குழந்தையை ஜப்பானில் 78 வயது முதியவர் ஒருவர் காப்பாற்றி இருக்கிறார்.

By Rajeswari
Google Oneindia Tamil News

டோக்கியோ: மூன்று நாள் அடர்ந்த காட்டுக்குள் சிக்கிக்கொண்டு, உயிர்க்கு போராடிய 2 வயது குழந்தையை ஜப்பானில் 78 வயது முதியவர் ஒருவர் காப்பாற்றி இருக்கிறார்.

ஜப்பானில் உள்ள யமாகுச்சி பிராந்தியத்தை சேர்ந்த முதியவர் விடுமுறை நாளில் தன் பேரக்குழந்தைகளை அழைத்துக் கொண்டு அங்குள்ள காட்டு பகுதிக்கு சென்றார்.

A 2-year-old child trapped in a horrible forest saved by a old man

அந்த காட்டிற்குள் அவர்கள் அனைவரும் சுற்றிப்பார்த்து கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் அவருடன் வந்த பேரக்குழந்தைகளில் ஒரு குழந்தையான யோஷிகி புஜிமோட்டோ(2 வயது) திடீர் என்று காணாமல் போய் உள்ளது. அதனால் அதிர்ச்சியடைந்த அனைவரும் அவனை அங்கும் இங்குமாய் தேடினார்கள்.

தொடர்ந்து தேடியும் அவன் கிடைக்கவில்லை. அதையடுத்து, இதுபற்றி அருகில் இருந்த காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் போலீஸ் நன்கு தேடியும் மூன்று நாள் வரை குழந்தை கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தான் அந்த குழந்தையை அந்த பகுதியை சேர்ந்த 78 வயது சமூக ஆர்வலர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். காட்டுக்குள் இருந்த ஒரு தண்ணீர் குட்டையின் அருகில் இருந்த பாறையில் அமர்ந்திருந்த அந்த குழந்தையை அவர் கண்டுபிடித்தார். அதன்பின் அந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

காட்டில் இருந்த அந்த மூன்று நாட்களுமே அந்த குழந்தை காட்டுக்குள் குட்டையில் இருந்த தண்ணீரை குடித்துதான் உயிர்வாழ்ந்துள்ளான். தற்போது ஜப்பானில் இருக்கும் கடும் வெப்பத்தில், எந்த உணவும் அருந்தாமல், அந்த சிறுவன் மூன்று நாட்கள் காட்டுக்குள் தாக்குபிடித்து இருந்துள்ளார்.

அந்த சிறுவனின் உடலில் வெயில் காரணமாக நீர்சத்து குறைந்து இருந்தது. மேலும் அவன் உடலில் சில இடங்களில் சில கீறல்களும் காய தழும்புகளும் இருந்தன. அது காட்டில் சுற்றியதால் ஏற்பட்டது என கூறப்படுகிறது. அவனை மீட்டது குறித்து சமூக ஆர்வலர் இதுகுறித்து பேட்டியளித்துள்ளார்.

அதில், நான் காட்டுக்குள் வழக்கமாக செல்வதுண்டு அப்படி இம்முறை சென்ற போதுதான், காட்டில் ஒரு பாறையில் யாரோ ஒரு குழந்தை அமர்ந்து இருப்பது போல் தெரிந்தது. பெரும்பாலும் இந்த பகுதியில் மனிதர்கள் நடமாட்டமே இல்லை என்பது எனக்கு தெரியும். எனவே எனக்கு சந்தேகமாக இருந்தது. அருகில் சென்று பார்த்த பிறகுதான் அது குழந்தை என்று தெரிந்தது. அந்த குழந்தையை அந்த நிலைமையில் பார்த்ததும் என் இதயமே நின்றுவிடுவது போல இருந்தது. உடனே நான் அந்த குழந்தையை பத்திரமாக மீட்டு வந்தேன், என்று கூறினார்.

English summary
A 78-year-old elder saved a 2-year-old child who struggled to survive a three-day dark forest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X