For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைஃபை வைப்பதற்குள் இவ்ளோ களேபரமா.. அமெரிக்காவில் ஏர்பஸ் விமானத்தை கடத்த முயன்ற 20 வயது மாணவர்!

அமெரிக்காவில் ஏர்பஸ் விமானம் ஒன்றை மாணவர் ஒருவர் கடத்த முயன்று இருக்கிறார்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் ஏர்பஸ் 321 விமானம் ஒன்றை மாணவர் ஒருவர் கடத்த முயன்று இருக்கிறார். இந்த சம்பவம் அங்கே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகில் இருக்கும் பெரிய விமானங்களில் அமெரிக்காவில் உள்ள ஏர்பஸ் 321 விமானமும் ஒன்றாகும். பார்க்கவே பெரிய அளவில் உள்ள இந்த விமானம் நீண்ட தூர பயணங்களுக்கு அமெரிக்க விமான துறையால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதை இயக்குவதும் மிகவும் சிரமமான விஷயம் ஆகும். மிகவும் திறமை கொண்ட நபர்கள் மட்டுமே இந்த விமானத்தை இயக்க முடியும்.

வைஃபை பணிகள்

வைஃபை பணிகள்

இந்த நிலையில் அமெரிக்காவின் ஓர்லாண்டோ விமான நிலையத்தில் கடந்த 3 நாட்களாக இந்த விமானம் நிறுத்தி வைக்கப்பட்டு வந்துள்ளது. வைஃபை கருவி பொருத்தும் பணி அந்த விமானத்திற்குள் நடந்து கொண்டு இருந்துள்ளது. அந்த சமயத்தில் பணியாளர்கள் வெளியேறிய நேரம் பார்த்து அங்கு 20 வயது நிரம்பிய நிஷால் சங்கத் வந்து, விமானத்தை கடத்த முயன்று இருக்கிறார்.

வேகமாக கடத்த முயற்சி

வேகமாக கடத்த முயற்சி

வேகமாக வேகமாக விமானத்திற்குள் நுழைந்தவர் விமானிகளின் அறையான காக்பீட்டிற்குள் சென்றுள்ளார். அதன்பின் விமான எஞ்சினை ஆன் செய்து இருக்கிறார். ஆனால் அவர் அதன்பின் விமானத்தை இயக்க முடியாமல் திணறி உள்ளார்.

யார் இவர்

யார் இவர்

அதற்குள் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அந்த விமானத்திற்குள் நுழைந்தனர். இதனால் அவர் விமானத்தை கடத்துவது தடுத்து நிறுத்தப்பட்டது. இவர் பெயர் நிஷால் சங்கத். இவர் கனடா மற்றும் அமெரிக்காவில் குடியுரிமை வைத்து இருக்கிறார். இவர் கல்லூரி மாணவர்.

விசாரணை நடக்கிறது

விசாரணை நடக்கிறது

பைலட்டிற்கு படித்திருக்கும் இவர் கமார்சியல் விமானம் ஓட்ட லைசென்ஸ் வைத்து இருக்கிறார். இவர் எந்த திட்டத்தையும் மனதில் வைத்து இப்படி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. பாதுகாப்பு அதிகாரிகள் இவரை விசாரணை செய்து வருகிறார்கள்.

English summary
A 20-year-old student tried to steal an Airbus in the US.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X