For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பயோ ஆயுதமாக மாற்றப்படுகிறதா கொரோனா வைரஸ்.. ஆய்வு கட்டுரையால் பெரும் சர்ச்சை

Google Oneindia Tamil News

Recommended Video

    சீனா எதையோ மறைக்கிறது.. இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை !

    பெய்ஜிங்: சீனாவில் வைரஸ் பரவியது குறித்து சர்ச்சையான கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. அந்த கட்டுரையில் பயோ ஆயுதமாக மாற்றப்படும் முயற்சியால் கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இதை சீனா முற்றிலும் மறுத்துள்ளது. இது இந்த கட்டுரை முற்றிலும் தவறானது என்று தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவைச் சேர்ந்த zerohedge என்ற பிரபல இணையதளத்தில் " is this tha man behind the globel coronovirus pandemic " என்ற பெயரில் ஒரு ஆய்வு கட்டுரை வெளியாகி இருந்தது. புதன்கிழமை வெளியிடப்பட்ட அந்த கட்டுரையில் சீனாவில் தற்போது மிக மோசமாக பாதிப்பை ஏற்படுத்தி உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விவரிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்குவதற்கு காரணம் அதை பயோ ஆயுதமாக மாற்ற முயற்சியில் தான் நடந்திருப்பதாக கூறப்பபட்டுள்ளது. சீனாவின் வுகான் வைராலஜி நிறுவனம் உலகின் மிக ஆபத்தான நோய்க்கிருமிகளை ஆய்வு செய்து வருகிறது. இந்த நிறுவனமே உலகில் சுகாதார அவசர நிலைக்கு காரணம் என்று விவரிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸால் சீனாவுக்கு வெளியே முதல் பலி.. பிலிப்பைன்ஸில் முதல் உயிரிழப்பு கொரோனா வைரஸால் சீனாவுக்கு வெளியே முதல் பலி.. பிலிப்பைன்ஸில் முதல் உயிரிழப்பு

    ஆயுதமாக மாற்றியது

    ஆயுதமாக மாற்றியது

    மேலும் அந்த கட்டுரையில். "வளர்ந்து வரும் ஊகங்கள் என்னவென்றால், வுஹானின் கடல் உணவு மற்றும் விலங்குகள் சந்தையில் யாரோ வவ்வால் சூப் சாப்பிட்டதே கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதற்கு காரணம் என்று சொல்கிறார்கள். ஆனால் முற்றிலும் கேலிக்கூத்தானது. கொரோனா வைரஸ் பரவ உண்மையான காரணம் அதை ஆயுதமாக மாற்ற முயன்றது காரணமாக இருக்கலாம்.

    வுகான் வைரலாஜி நிறுவனம்

    வுகான் வைரலாஜி நிறுவனம்

    கொரோனா வைரஸ் உருவாக்கம் முதலில் கனடாவில் இருந்திருக்கலாம். அது வுகானின் வைரலாஜி நிறுவனத்திற்கு வந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் உலகின் மிக ஆபத்தான நோய்கிருமிகளை ஆய்வு செய்யும் லெவல்-4 ஆய்வகம் உள்ளது. இங்கு ஒரு ஆராய்ச்சியாளர் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவர் "எபோலா மற்றும் SARS- உடன் தொடர்புடைய கொரோனா வைரஸ்கள் நீண்ட காலமாக செயலற்ற நிலையில் இருக்க அனுமதிக்கும் மூலக்கூறு பொறிமுறையை ஆராய்ச்சி செய்ய வெளவால்களைப் பயன்படுத்துகிறார். கொரோனா வைரஸ் உருவான காரணத்தைத் தெரிந்துகொள்ள அந்த விஞ்ஞானியை கேளுங்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிர்வலைகள்

    அதிர்வலைகள்

    அத்துடன் அவரது இமெயில், தொலைபேசி எண், அவர் முன்பு பணியாற்றி இடம், அவரது பூர்வீகம், அவர் ஏன் வுஹானில் சேர்ந்தார் என தனிப்பட்ட பல தகவல்கள் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. ஆனால் வுகான் ஆய்வகம்தான் இந்த வைரஸைப் பரப்பியது என்பதற்கான முறையான ஆதாரங்கள் எதுவும் அந்தக் கட்டுரையில் இல்லை. எனினும் இந்த கட்டுரை உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பலரும் விவாதித்து வருகிறார்கள். சீனாவை பலரும் அவதூறாக பேச ஆரம்பித்தனர்.

    தவறானது

    தவறானது

    ஆனால் இதுபற்றி வுகான் வைராலஜி நிறுவனமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸால் வௌவால்கள் ஏன் பாதிப்படைவதில்லை என்பதை விஞ்ஞானி ஜாவ் பெங் ஆய்வுசெய்து வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே `வுகான் நிறுவனம், கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்காகவே ஆராய்ச்சிகளை செய்து வருவதாகவும் கொரோனா வைரஸ் பயோ ஆயுதமாக மாற்றப்படவில்லை என்றும் இது முற்றிலும் தவறானது விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதனிடையே தனிப்பட்ட நபர்களின் தகவல்களை வெளியிட்டதாக கூறி zerohedge இணையதளத்தின் டுவிட்டர் அக்கவுண்டை ரத்து செய்துள்ளது டுவிட்டர் நிர்வாகம்

    English summary
    a article created some debate over how coronavirus spread in china, zerohedge twitter account supend after controversy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X