For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உடலின் மொத்த தோலையும் மாற்றிய டாக்டர்கள்... பள்ளி மாணவனின் உயிரை காப்பற்ற வித்தியாசமான சிகிச்சை

சிரியாவில் மோசமான நோயால் பாதிக்கப்பட்டு இருந்த சிறுவனின் மொத்த தோலும் மாற்றப்பட்டு சாதனை செய்யப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    உடலின் மொத்த தோலையும் மாற்றிய டாக்டர்கள்...வீடியோ

    ரோம்: சிரியாவில் பள்ளி சிறுவன் ஒருவன் குணப்படுத்த முடியாத நோய் ஒன்றினால் பல நாட்களாக கஷ்டப்பட்டு வந்து இருக்கிறான். அவனுக்கு உடல் முழுக்க தோல் உரியும் வித்தியாசமான நோய் ஒன்று இருந்திருக்கிறது.

    இந்த நிலையில் இந்த சிறுவன் இறந்துவிடுவான் என அவன் பெற்றோர் நினைத்து இருந்த சமயத்தில் வித்தியாசமாக காப்பற்றப்பட்டு இருக்கிறான்.

    இதற்காக இத்தாலியை சேர்ந்த மருத்துவர்கள் அவனது உடலின் தோலை மாற்றி இருக்கின்றனர். கிட்டத்தட்ட உடலில் இருக்கும் மொத்த தோலையும் எடுத்துவிட்டு புதிய தோல் கொடுத்துள்ளனர்.

    புதிய நோய்

    புதிய நோய்

    சிரியாவை சேர்ந்த 9 வயது பள்ளி சிறுவன் ஒருவன் கொடிய நோய் ஒன்றால் கடந்த 4 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வந்து இருக்கிறான். 'ஜங்சனால் எபிடர்மோல்சிஸ் புலோசா' என்ற இந்த நோய் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த இவனுக்கு உடலில் தோல் உறிந்து இருக்கிறது. லேசாக யாராவது தொட்டால் கூட தோல் உறிந்து ரத்தம் வந்தது உள்ளது.

    மரணம் அடைய வாய்ப்பு

    மரணம் அடைய வாய்ப்பு

    இந்த நிலையில் சிரியாவில் இருந்த டாக்டர்கள் அவனை நான்கு வருடமாக மிகவும் பாதுகாப்பாக கவனித்துக் கொண்டனர். பல மருத்துவ முறைகளை முயற்சித்தும் அவனுக்கு நோய் சரியாகவில்லை. இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன் அவன் மரணம் அடைந்து விடுவான் என்று கூறியிருக்கின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் அவன் மரணம் அடைய வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தனர்.

    இத்தாலி கொண்டு சென்றனர்

    இத்தாலி கொண்டு சென்றனர்

    இந்த நிலையில் சிரியாவில் இருந்த அந்த சிறுவனை அவனது பெற்றோர் இத்தாலி கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு புதிய தோல் பொருத்தும் முயற்சியில் இறங்கி டாக்டர்கள் இறங்கினர். முதலில் அவனது தந்தையின் தோலை எடுத்து அவனது உடலில் போர்த்தலாம் என முயற்சி செய்து இருக்கின்றனர். ஆனால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்து இருக்கிறது.

    மருத்துவர்கள் புதிய சாதனை

    மருத்துவர்கள் புதிய சாதனை

    இதையடுத்து அவர்கள் சில நாட்களுக்கு முன் செயற்கை தோல் கண்டுபிடித்த விஞ்ஞானிகளின் உதவியை நாடினர். அதன்படி அவனுக்கு புதிதாக செயற்கை தோல் தயாரிக்கப்பட்டது. அந்த செயற்கை தொல் பொருத்தும் பணி மருத்துவர்களால் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. தற்போது அந்த சிறுவன் முழு உடல் நலத்துடன் இருப்பதாக அவன் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

    English summary
    A boy with a rare incurable disease has been saved by scientists who created a new skin for almost his entire body in Italy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X