For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எகிப்தில் இந்திய சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து பயங்கர விபத்து.. 16 பேர் உயிரிழப்பு

Google Oneindia Tamil News

கெய்ரோ: எகிப்து நாட்டில் இந்திய சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியது.இதில் 16 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக தகவல்களை அறிய எகிப்து இந்திய தூதரகம் உதவி எண்களை அறிவித்துள்ளது

எகிப்து நாட்டின் ஐன் சோக்னா அருகே போர்ட் சைட்-டாமீட்டா நெடுஞ்சாலையில் சனிக்கிமை அன்று இந்திய சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து லாரி மீது பயங்கரமாக மோதியது.

 A bus with 16 Indian tourists onboard met with an accident in Egypt

இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களில் 16 பேர் இந்திய சுற்றுலா பயணிகள் ஆவார். இதில் காயம் அடைந்த நிலையில் இந்தியர்கள் கெய்ரோ மற்றும் சூஷ் நகரில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்கள், காயம் அடைந்தவர்களின் விவரத்தை அறிய இரண்டு உதவி எண்களை எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அதன்படி +20-1211299905 மற்றும் +20-1283487779 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம்.

English summary
"Bus accident with 16 Indian tourists on board occurred today near Ain Sokhna in Egypt. Embassy officials are at hospitals in Suez city and Cairo. Helpline numbers +20-1211299905 and +20-1283487779 are available," the Indian Embassy tweeted
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X