For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாதித்த சீன மருத்துவர்கள்! கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமான கேமரூன் மாணவர்! எப்படி வென்றார்?

Google Oneindia Tamil News

Recommended Video

    கொரோனாவுக்கு தடுப்பூசி... இந்தியர் தலைமையில் முயற்சி

    பெய்ஜிங்: ஆப்பிரிக்க நாடான மேகருனைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கொரோனா பாதிப்பில் இருந்து முற்றிலும் குணமடைந்துள்ளார். இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பது சீன மருத்துவர்களே தான். எப்படி இந்த மாணவர் கொரோனாவை வென்றார் என்பதை இப்போது பார்ப்போம்.

    சீன நகரமான ஜிங்ஜோவில் வசிக்கும் 21 வயதான கேமரூனிய மாணவர் 'கெம் செனு பாவெல் டேரில்', இவரை கொரோனா வைரஸ் தாக்கியயது. ஆனால் இவருக்க்கோ சீனாவை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை, அது சாத்தியமானதாக இருந்தாலும் கூட வெளியேற விருப்பம் இல்லை.

    இது தொடர்பாக அந்த மாணவர் கூறுகையில், "என்ன நடந்தாலும் பரவாயில்லை, நான் நோயை மீண்டும் ஆப்பிரிக்காவுக்கு கொண்டு செல்ல விரும்பவில்லை," என்று அவர் தனது பல்கலைக்கழக ஓய்வறையில் இருந்து கூறினார், அங்கு அவர் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அங்கு அவர் காய்ச்சல், வறட்டு இருமல் மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் அவதிப்பட்டு வந்தார்.

    எப்படி மரணம்

    எப்படி மரணம்

    அவர் கொரோனாவால் நோய்வாய்ப்பட்டபோது, சிறு குழந்தையாக இருக்கும் போது மலேரியா நோயால் பாதிக்கப்பட்ட நேரத்தை எண்ணி மோசமாக அஞ்சினார். மாணவர் பாவெல் டேரில் அச்சம் குறித்து கூறுகையில், "நான் முதன்முறையாக மருத்துவமனைக்குச் செல்லும்போது, என் மரணம் குறித்தும், அது எப்படி நடக்கும் என்று நான் நினைத்தேன்," என்று அவர் கூறினார்.

    13 நாட்கள் சிகிச்சை

    13 நாட்கள் சிகிச்சை

    13 நாட்கள் அவர் உள்ளூர் சீன மருத்துவமனையில் தனிமையில் இருந்தார். எச்.ஐ.வி நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பொதுவாக பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் மருந்துகள் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டு வார மருத்துவ கவனிப்புக்குப் பிறகு அவருக்கு குணமடைவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தது.

    கொரோனா இல்லை

    கொரோனா இல்லை

    அவருக்கு அளிக்கப்பட்ட சி.டி ஸ்கேன் நோயின் எந்த தடயத்தையும் காட்டவில்லை. கொடிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் ஆப்பிரிக்க நபராகவும், குணமடைந்த முதல் நபராகவும் ஆனார். ஆனால் அவரது மருத்துவ பராமரிப்பு குறித்த தகவல்களை சீன அரசு வெளியிட மறுத்துவிட்டது.

    மோசமாக பாதிக்கும்

    மோசமாக பாதிக்கும்

    இதற்கிடையே கொரோனா வைரஸ் பாதிப்பை உறுதிப்படுத்திய ஆப்பிரிக்காவின் முதல் நாடாக எகிப்து மாறியுள்ளது. பலவீனமான சுகாதார அமைப்புகளைக் கொண்ட நாடுகள் நோயின் வெடிப்பை சமாளிக்க போராடக்கூடும் என்று சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். இந்த நோய் ஏற்கனவே 1,600 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது மற்றும் 68,000 க்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. இவை எல்லாமே சீனாவில் தான்.

    விருப்பம் இல்லை

    விருப்பம் இல்லை

    இந்தசூழலில் தனது நாட்டுக்கு நோயை எடுத்த செல்ல விருப்பம் இல்லை என்று கேமரூன் மாணவர் சீனாவிலேயே தங்கி சிகிச்சை பெற்றிருக்கிறார். அனைத்து மருத்துவமனைக் கட்டணங்களும் சீன அரசாங்கத்தால் இலவசமாக அளிக்கப்பட்டு தற்போது முழுமையாக குணம் அடைந்து உள்ளார் 'கெம் செனு பாவெல் டேரில்'.

    English summary
    A Cameroon student recovered from Coronavirus, how he recovered, deatails here
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X