For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பூனைதான் கொல்ல முயற்சித்தது... மூதாட்டி கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கில் திருப்பம்

ஜப்பானில் மூதாட்டி ஒருவரை கொல்ல முயன்ற வழக்கில் பூனை ஒன்று முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டோக்கியோ: ஜப்பானில் மூதாட்டி ஒருவரை கொல்ல முயன்ற வழக்கில் பூனை ஒன்று முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த மூதாட்டி தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

இதுவரை கிடைத்த தடயங்களின் அடிப்படையில் பூனைதான் கொலை முயற்சியை செய்து இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் தாக்கப்பட்ட அந்த மூதாட்டியின் முதல்கட்ட வாக்குமூலம் அதுகுறித்து அதிர்ச்சியான தகவல்களை தருகிறது.

தற்போது டோக்கியோ போலீசார் இது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண்ணின் உறவினர்களை தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

ரத்த வெள்ளத்தில் மூதாட்டி

ரத்த வெள்ளத்தில் மூதாட்டி

ஜப்பானின் டோக்கியோ நகரில் 'மயாகோ மாட்சுமோட்டா' என்ற 80 வயது நிரம்பிய மூதாட்டி தனது மகளுடன் வசித்து வந்தார். இவரது மகள் பொருட்கள் வாங்க வெளியே சென்று விட்டு திரும்பிய போது அவரது தாய் ரத்த வெள்ளத்தில் கிடந்து இருக்கிறார். அவர் முகம் முழுக்க கீறல் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளார். இதையடுத்து அந்த பெண் தனது தாயை உடனாடியாக் மருத்துமனையில் அனுமதித்தார்.

போலீசார் தீவிர விசாரணை

போலீசார் தீவிர விசாரணை

இந்த தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினார். அந்த வீட்டை விட்டு வெளியே செல்லும் போது அந்தப் பெண் வீட்டை வெளியே பூட்டு போட்டு பூட்டிவிட்டு சென்று இருக்கிறார். மற்ற எல்லா பகுதியின் கதவுகளும் பூட்டி இருந்திருக்கின்றன. இதனால கொலைகாரன் எப்படி உள்ளே வந்த இருப்பான் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறி இருக்கிறது. மேலும் அங்கு புதிய மனிதர்களின் எந்த கை ரேகையும் பதியவில்லை.

பூனைதான் முதல் குற்றவாளி

பூனைதான் முதல் குற்றவாளி

இதையடுத்து அந்த மூதாட்டிக்கு சில நொடிகள் நினைவு திரும்பி இருக்கிறது. அப்போது அவர் 'பூனை' என்று கூறி இருக்கிறார். இதையடுத்து போலீசார் அந்த வீட்டில் இருந்த பூனையின் மீது தங்கள் சந்தேகத்தை திருப்பி உள்ளனர். மேலும் அந்த பாட்டியின் முகத்தில் ஆழமாக இருந்த கீறல்கள் அனைத்தும் பூனையின் நக கீறல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பூனையை தேடும் போலீஸ்

பூனையை தேடும் போலீஸ்

தற்போது அந்த பூனையை இந்த சம்பவத்தில் முதல் குற்றவாளியாக்கி இருக்கின்றனர். மேலும் அந்த பூனை மூதாட்டி தாக்கப்பட்ட நொடியில் இருந்து காணாமல் போய் இருக்கிறது. தற்போது போலீசார் பூனையை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அந்த மூதாட்டி நினைவு திரும்பினால் இந்த வழக்கில் உள்ள முடிச்சுகள் விலகும் என கூறப்படுகிறது.

English summary
A cat identified as a suspect in old woman named Mayuko Matsumoto's attempted murder in Japan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X