For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எவ்வளவு குடிச்சும் எதுவும் ஆகலை... 7 லட்சத்திற்கு அடிச்சும் போதை ஏறலை..!

சீனாவை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் ஒரே நாளில் 7 லட்சம் ரூபாய்க்கு மது வாங்கி குடித்தும் போதை ஏறாமல் கஷ்டப்பட்டு இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசிக்கும் சீனாவை சேர்ந்த ஷாங் வை என்ற எழுத்தாளர் 7 லட்சம் ரூபாய்க்கு மதுபானம் வாங்கி குடித்து இருக்கிறார். லண்டனில் மிகவும் பிரபலமான அந்த மதுவை குடித்தும் அவருக்கு போதை ஏறாமல் இருந்திருக்கிறது.

லண்டனில் விற்கப்படும் மது வகையிலேயே அவர் வாங்கி குடித்த மது வகைதான் மிகவும் விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த மதுவை வாங்கி குடிப்பதற்கு பல பேர் காத்துக் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனாலும் இவ்வளவு காசு கொடுத்து வாங்கியும் தனக்கு போதை ஏறவில்லை, அந்த மதுக்கடை என்னை ஏமாற்றிவிட்டது என்று கோபமாக பேசி இருக்கிறார் அந்த எழுத்தாளர்.

விலை உயர்ந்த மது

விலை உயர்ந்த மது

லண்டனில் இருக்கும் ''வால்தாஸ் ஆம் ஸீ'' ஹோட்டல் மது வகைகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற ஹோட்டல் ஆகும். உலகிலேயே மிகவும் விலை உயர்வான் மது வகைகள் எல்லாம் இந்த கடையில் கிடைக்கும். மேலும் அங்கு மிக குறைந்த மதுவே 2,00,000 ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த ஹோட்டலில் இருக்கும் மிகவும் விலை உயர்ந்த மதுவை தற்போது ஒரு சீன எழுத்தாளர் வாங்கி இருக்கிறார்.

7லட்சத்திற்கு மது

7லட்சத்திற்கு மது

இந்த நிலையில் அந்த ஹோட்டலில் இருக்கும் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான மது வகை ஒன்றை சீனாவை சேர்ந்த எழுத்தாளர் ஷாங் வை வாங்கி இருக்கிறார். மிகவும் பணக்காரரான இவர் அந்த மது வகையை தேடி குடிக்க வேண்டும் என அங்கு வந்ததாக கூறியிருக்கிறார். 1878ல் செய்யப்பட்ட பாரம்பரியமான மது என்பதால் அதற்கு அந்த அளவிற்கு விலை வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

சுத்தமாக போதை ஏறவில்லை

சுத்தமாக போதை ஏறவில்லை

இந்த நிலையில் அந்த எழுத்தாளர் மது மொத்தத்தையும் குடித்தும் கூட அவருக்கு சிறிய அளவில் கூட போதை ஏறாமல் இருந்து இருக்கிறது. இதையடுத்து அவர் தனக்கு போலியான மதுவை, மிகவும் அதிக பணம் சொல்லி கொடுத்து ஏமாற்றிவிட்டார்கள் என புகார் அளித்து இருக்கிறார். மேலும் அந்த மது குடிப்பதற்கு உண்மையான மதுபானம் போலவே இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

ஏமாற்றிய ஹோட்டல்

ஏமாற்றிய ஹோட்டல்

இந்த நிலையில் அவர் அந்த மதுவின் மீதியை சோதனையகத்தில் கொடுத்து சோதனை செய்தும் பார்த்து இருக்கிறார். அந்த சோதனையின் படி அவர் அருந்தியது போலியான மதுபானம் என்பது தெரிய வந்து இருக்கிறது. இதையயடுத்து அவர் அந்த ஹோட்டலின் மீது வழக்கு தொடுப்பதாக கூறியிருந்தார். ஆனால் ஹோட்டல் நிர்வாகம் அவரிடம் வாங்கிய பணத்தை திரும்ப அளிக்க முடிவு செய்து இருக்கிறது.

அடப்பாவிகளா.. கடைசியில் அது "கழனி"த் தண்ணியா!

English summary
A Chinese millionaire paid nearly 7 lakhs India rupees for a world's oldest and most expensive whiskies which was later exposed as a fake made in the 1970. He decided to sue the hotel for fake product.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X