For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிரம்ப்பின் சுற்றுச்சுவர் திட்டம் 'நாசம்'.. எல்லை பகுதியை விலைக்கு வாங்கி அமெரிக்க நிறுவனம் 'ஆசம்'

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க எல்லையில் சுவர் எழுப்புவதற்காக வைத்திருந்த நிலத்தை தனியார் நிறுவனம் ஒன்று வாங்கி இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    டிரம்ப்பின் சுற்றுச்சுவர் திட்டம் நாசம்..வீடியோ

    நியூயார்க்: டொனால்ட் டிரம்ப் அமெரிக்க எல்லையில் சுவர் எழுப்புவதற்காக வைத்திருந்த நிலத்தை தனியார் நிறுவனம் ஒன்று வாங்கி இருக்கிறது. அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் இருக்கும் முக்கால்வாசி இடங்களை அந்த நிறுவனம் வாங்கிவிட்டது.

    எல்லையில் சுவர் கட்டுவதை தடுப்பதற்காக அந்த நிறுவனம் இந்த செயலில் இறங்கி இருப்பதாக கூறுகிறது. இதற்காக அந்த நிறுவனம் பெரிய திட்டங்களை வகுத்து இருக்கிறது.

    கார்ட்ஸ் அகெய்ன்ஸ்ட் ஹுமானிட்டி என்ற அந்த நிறுவனம் இந்த அறிவிப்பால் ஒரே நாளில் அமெரிக்க முழுக்க பேமஸ் ஆகி இருக்கிறது. பலர் இந்த நிறுவனத்தை பாராட்டினாலும் சிலர் இது மலிவான விளம்பரம் என்றும் கூறியுள்ளனர்.

    அமெரிக்க அதிபரை அதிரடி பிளான்

    அமெரிக்க அதிபரை அதிரடி பிளான்

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றவுடன் அவர் கூறிய வாக்குறுதிகளில் முக்கியமானது சுவர் எழுப்புவது. அதன்படி அமெரிக்காவின் அனைத்து எல்லை பகுதிகளையும் சுவர் எழுப்பி மூடப்போவதாக கூறினார். இதன் காரணமாக யாரும் அமெரிக்க நாட்டுக்குள் அனுமதி இல்லாமல் நுழைய முடியாது. இந்த திட்டத்திற்கு நிறைய எதிர்ப்புகளும், ஆதரவுகளும் வந்தது.

    நிலைகளை வாங்கிய தனியார் நிறுவனம்

    நிலைகளை வாங்கிய தனியார் நிறுவனம்

    அமெரிக்காவில் இருக்கும் ''கார்ட்ஸ் அகெய்ன்ஸ்ட் ஹுமானிட்டி'' என்ற நிறுவனம் டிரம்பின் இந்த கனவில் மண் அள்ளி போட்டு இருக்கிறது. இந்த நிறுவனம் அமெரிக்காவில் மிகவும் திரில்லான விளையாட்டுகளை நடத்தும் நிறுவனம் ஆகும். தற்போது அது அமெரிக்காவின் எல்லையில் இருக்கும் முக்கால்வாசி நிலங்களை விலை கொடுத்து வாங்கி இருக்கிறது. டிரம்ப் எங்கு எல்லாம் சுவர் எழுப்புவார் என்று நினைக்கிறதோ அங்கு எல்லாம் நிலத்தை வாங்கிவிட்டது.

    ஆறடி சுவருதான் அமெரிக்கவை தடுக்குமா

    ஆறடி சுவருதான் அமெரிக்கவை தடுக்குமா

    இந்த நிலங்களை வாங்கியதற்கு அந்த நிறுவனம் விளக்கத்தை கொடுத்து இருக்கிறது. அதன்படி ''டிரம்ப் சுவர் எழுப்புவதற்காக நிலங்களை கேட்கும் போது அந்த நிலத்தை கொடுக்க மாட்டோம்'' என்று கூறியிருக்கிறது. மேலும் இன்னும் எல்லையில் இருக்கும் நிலங்கள் எல்லாவற்றையும் வாங்கி மொத்தமாக டிரம்பின் சுவர் எழுப்பும் திட்டத்திற்கு முடிவு காட்டுவோம் என்று கூறியுள்ளது. இதன் காரணமாக டிரம்ப்பின் சுவர் எழுப்பும் கனவின் பல செங்கல்கள் சரிந்து இருக்கிறது.

    வேற லெவல் பிளான்

    வேற லெவல் பிளான்

    இவர்கள் வாங்கும் அந்த நிலத்தில் நிறைய பயிர் செய்து வேளாண்மை செய்ய இருப்பதாக கூறுகின்றனர். மேலும் அமெரிக்க அதிபருடன் மோதுவதற்காக அமெரிக்காவின் முக்கிய வக்கீல்களை எல்லாம் தன்னுடைய நிறுவனத்தில் பணிக்கு எடுத்து இருக்கிறது. அவரது கனவை தவிடு பொடி ஆக்குவதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லுவோம் என்று கூறியிருக்கிறது. அதிபரின் மோசமான திட்டத்திற்கு எப்போதும் எதிராக இருப்போம் என அந்த நிறுவனத்தின் பணியாளர்கள் பேசியுள்ளனர்.

    English summary
    A Company called 'Cards Against Humanity' has bought land on US border to stop Trump's wall. It says it wants to save America from Donald Trump.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X