For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொப்புள் கொடியை கூட அறுக்காமல் பச்சிளம் குழந்தையை ஆசிரமத்திற்கு கொரியரில் அனுப்பிய கொடூர பெற்றோர்!

சீனாவில் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை கூட அறுக்காமல் அனாதை ஆசிரமத்திற்கு கொரியரில் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை கூட அறுக்காமல் அனாதை ஆசிரமத்திற்கு கொரியரில் பெற்றோரே அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள ஃபுஷோ நகரைச் சேர்ந்த தம்பதிக்கு நேற்று முன்தினம் வீட்டிலேயே பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் அந்த தம்பதி குழந்தையை விரும்பவில்லை எனத் தெரிகிறது.

இதனால் அந்த குழந்தையை மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்துக்கு அனுப்பு பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து குழந்தையின் தொப்புள் கொடியை கூட அறுக்காமால் பிளாஸ்டிக் பையில் பார்சல் செய்துள்ளனர்.

கொரியரில் பார்சல்

கொரியரில் பார்சல்

பின்னர் கொரியர் நிறுவனம் ஒன்றுக்கு பார்சல் இருப்பதாக கூறி அழைப்பு விடுத்தது அந்த தம்பதி. இதையடுத்து பார்சல் நிறுவனத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார்.

சந்தேகத்துடன் பெற்ற இளைஞர்

சந்தேகத்துடன் பெற்ற இளைஞர்

அப்போது அந்த இளைஞரிடம் பார்சலை ஒப்படைத்த அந்த தம்பதி அதனை பார்க்க கூடாது என கட்டளையிட்டனர். இதையடுத்து சந்தேகத்துடனே பார்சலை பெற்றுச்சென்றுள்ளார் அந்த இளைஞர்.

பார்சலில் அழு குரல்

பார்சலில் அழு குரல்

பாதி தூரம் கடந்தப் பின் பார்சலில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர் பார்சலை பிரித்து பார்த்துள்ளார்.

பார்சலில் பச்சிளம் குழந்தை

பார்சலில் பச்சிளம் குழந்தை

அப்போது அதில் பிறந்த பச்சிளம் குழந்தையை இருப்பதைக் கண்டு திடுக்கிட்ட அவர் அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். அங்கு வந்த மக்கள் குழந்தைக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தியுள்ளனர்.

English summary
The pair from Fuzhou City in China’s Fujian Province did not bother to cut the girl’s umbilical cord when they put the child in a plastic packet and called a courier service to pick up the package.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X