For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிரோன் மூலம் நடந்த பகீர் தாக்குதல்.. சவுதியின் பெரிய பெட்ரோல் பைப்-லைன் காலி.. பெரும் பதற்றம்!

சவுதி அரேபியாவின் பெரிய பெட்ரோல்/ டீசல் பைப் லைன் ஒன்று டிரோன் மூலம் தாக்கி அழிக்கப்பட்டு உள்ளது.

Google Oneindia Tamil News

ரியாத்: சவுதி அரேபியாவின் பெரிய பெட்ரோல்/ டீசல் பைப் லைன் ஒன்று டிரோன் மூலம் தாக்கி அழிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கு இடையில் தற்போது பிரச்சனை நிலவி வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. ஈரானிடம் இதனால் உலக நாடுகள் எதுவும் எண்ணெய் வர்த்தகம் செய்ய முடியாது.

A drone attack in Saudi Arabias oil pipeline: War tension in the Middle East

இதையடுத்து ஈரான் மத்திய கிழக்கு நாடுகள் எண்ணெய் வர்த்தகம் செய்ய பயன்படுத்தும் ஹோர்முஸ் ஜலசந்தியை மூட போவதாக அறிவித்தது. ஹோர்முஸ் ஜலசந்தி வழியேதான் மத்திய கிழக்கு நாடுகள் எண்ணெய் வர்த்தகம் செய்கிறது.

இந்த நிலையில் நேற்று முதல்நாள் சவுதி, அமீரகம் ஆகிய நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் மர்மமான முறையில் ஹோர்முஸ் ஜலசந்தியில் தாக்குதலுக்கு உள்ளது. இதற்கு ஈரான்தான் காரணம் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதனால் அங்கு தற்போது அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில் தற்போது சவுதி அரேபியாவின் பெரிய பெட்ரோல்/ டீசல் பைப் லைன் ஒன்று டிரோன் மூலம் தாக்கி அழிக்கப்பட்டு உள்ளது. செங்கடலின் முடிவில் பெர்ஷியன் கடல் இணையும் இடத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

தொடங்கியது மோதல்.. எமிரேட், சவுதியின் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த ஈரான்? பகீர் குற்றச்சாட்டு! தொடங்கியது மோதல்.. எமிரேட், சவுதியின் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த ஈரான்? பகீர் குற்றச்சாட்டு!

ஏமனில் உள்ள ஹுதி போராளி அமைப்பு மூலம் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இது ஈரானின் ஆதரவு பெற்ற அமைப்பு ஆகும். இதனால் ஈரான்தான் இந்த தாக்குதலை நடத்த சொல்லி இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த பைப் லைன் சுமார் 1300 கிமீ நீளம் கொண்டது. ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை அடைத்தால், இந்த பைப்லைன் மூலம் மட்டுமே சவுதி எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியும். ஆனால் தற்போது அதுவே தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இதனால் சவுதி எண்ணெய் ஏற்றுமதி செய்வது சில நாட்களில் தடைபடும்.

இதை சரி செய்ய எப்படியும் 6 மாதங்கள் வரை ஆகும் என்று சவுதி தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என்று சவுதி கூறியுள்ளது.

English summary
A drone attack in Saudi Arabia's oil pipeline by rebel group: War tension in the Middle East.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X