For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெற்றிகரமாக வால் நட்சத்திரத்தை நெருங்கியது “ரோசெட்டா” விண்கலம்!

Google Oneindia Tamil News

பிராங்க்பர்ட்: ஐரோப்பிய விண்கலமான ரோசெட்டா, வெற்றிகரமாக 67பி/சுரிமோவ்-கெரசிமென்கா வால் நட்சத்திரத்தினை நெருங்கியுள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி ஐரோப்பிய விண்வெளிக்கழகம் சார்பில் விண்ணில் செலுத்தப்பட்ட ரோசெட்டா விண்கலமானது தன்னுடைய 10 ஆண்டுகால பயணத்திற்குப் பின்பாக, அதனுடைய குறிக்கோளான வால் நட்சத்திரத்தை அடைந்துள்ளது.

1969 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த வால் நட்சத்திரமானது மிக வேகமாக தன்னுடைய சுற்றுப்பாதையில் சுற்றிவரும் ஒன்றாகும்.

A European space probe has just arrived at its destination

வால் நட்சத்திரத்தை அடைந்த முதலாவது விண்கலம் ரோசெட்டாவே ஆகும். இது, விண்வெளி வரலாற்றில் சாதனையாக கருதப்படுகிறது. ரோசெட்டா விண்கலம், அங்கிருந்து பூமிக்கு சமிக்கைகளை அனுப்பி வருகிறது.

தற்போது ரோசெட்டா வால் நட்சத்திரத்தை மிக அருகில் நெருங்கியுள்ளதால், வால் நட்சத்திரம் குறித்து மேலும் பல்வேறு தகவல்களை விஞ்ஞானிகள் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 3 கி.மீ நீளமும், 5 கி.மீ அகலமும் கொண்ட ராட்சத பாறையாக அந்த வால் நட்சத்திரம் காணப்படுகிறது.

A European space probe has just arrived at its destination

முன்பு கருதப்பட்டதுபோல, இவ்வால் நட்சத்திரம் கால்பந்து வடிவத்தில் இல்லை. கழுத்தால் பிணைக்கப்பட்ட இரண்டு பகுதிகளைக் கொண்டு "வாத்து" போல காட்சி அளிக்கிறது. வால் நட்சத்திரம் பற்றிய இந்த ஆய்வில் சூரிய குடும்பம் குறித்த ரகசியங்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருகிற நவம்பர் மாதம் இந்த வால் நட்சத்திரத்தில் ரோசெட்டா விண்கலம் தரையிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
THE maths, of course, were straightforward. The centuries-old celestial mechanics of Johannes Kepler and Joseph-Louis Lagrange made it clear that Rosetta, a European Space Agency (ESA) mission to intercept Comet 67P/Churyumov-Gerasimenko, should work.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X