For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இறங்கி எல்லாரும் பஸ்ல போங்க... விமானத்தை பாதியில் நிறுத்தி கட்டளையிட்ட பாக், பைலட்!

பாகிஸ்தானில் ஒரு விமான ஓட்டி விமானத்தை பாதியில் இறக்கிவிட்டு பயணிகளை பஸ் பிடித்து போகும்படி கூறியிருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

லாகூர்: பாகிஸ்தானில் ஒரு விமான ஓட்டி விமானத்தை பாதியில் இறக்கிவிட்டு பயணிகளை பஸ் பிடித்து போகும்படி கூறியிருக்கிறார். பாகிஸ்தானின் லாகூரில் நடந்த இந்த சம்பவம் மிகவும் வைரல் ஆகி இருக்கிறது.

விமானத்தை சரிவர இயக்குவதற்கு உண்டான சூழ்நிலை எதுவும் ஏற்படவில்லை என அந்த விமான ஓட்டி காரணம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பஸ் பயணத்திற்கு உண்டான பணத்தையும் அவர்கள் வழங்குவதாக தெரிவித்து இருக்கின்றனர்.

இதையடுத்து விமான ஓட்டிக்கும், பயணிகளுக்கும் இடையில் இதனால் பெரிய அளவில் பிரச்சனை ஏற்பட்டது. பயணிகளை விமானத்தை விட்டு வெளியேற்ற நிறைய வித்தியாசமான வழிகளை விமான நிறுவனம் கடைப்பிடித்து குறிப்பிடத்தக்கது.

பாதியில் தரை இறக்கப்பட்டது

பாதியில் தரை இறக்கப்பட்டது

பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான சர்வதேச பாகிஸ்தான் விமானம் நேற்று அபுதாபியில் இருந்து பாகிஸ்தானின் யார் ரஹீம் கான் என்ற பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆனால் இந்த விமானம் பாதியில் லாகூரில் நிறுத்தப்பட்டது. மேலும் விமானம் ஓட்டுவதற்கு உண்டான போதுமான வெளிச்சமும், சூழ்நிலையும் இல்லை என்று இதற்கு காரணம் கூறப்பட்டது.

பஸ் ஏறி போங்க

பஸ் ஏறி போங்க

இந்த நிலையில் அந்த விமானத்தின் ஓட்டுநர் பயணிகளை பாதியில் இறக்கிவிட்டது மட்டும் இல்லாமல். பயணிகளிடம் உங்களுக்கு பணம் அளிக்கப்டும் பஸ் பிடித்து செல்லுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் பயணிகள் அவரின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். மேலும் அந்த விமானத்தை விட்டு இறங்குவதற்கும் மறுத்துவிட்டனர்.

பயணிகளுக்கு புதிய கஷ்டம்

பயணிகளுக்கு புதிய கஷ்டம்

இதையடுத்து பயணிகளை விமானத்தை விட்டு இறங்க செய்வதற்காக அந்த விமான பணிப்பெண்கள் விமானத்தின் ஏசியை அணைத்து இருக்கின்றனர். கதவுகளையும் சாத்தி வைத்து இருக்கின்றனர். இதையடுத்து பயணிகள் அந்த விமாத்திற்குள் வெயில் சூடு தாங்காமல் வியர்வையில் கஷ்டப்பட்டு இருக்கின்றனர். இதையடுத்து ஒவ்வொரு பயணிகளாக விமானத்தை விட்டு வெளியேறி இருக்கின்றனர்.

வழக்கு போடப்படும்

வழக்கு போடப்படும்

மேலும் லாகூரில் இருந்து யார் ரஹீம் கான் என்ற இடம் 625 கிமீ தூரம் இருப்பதாகவும் அவ்வளவு தூரம் பேருந்தில் செல்ல முடியாது என்றும். வேறொரு விமானம் ஏற்பாடு செய்யும் படியும் பயணிகள் விமான ஓட்டியிடம் கூறியிருக்கின்றார். ஆனால் விமான நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது. இதையடுத்து பயணிகளில் சிலர் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடிவு செய்து இருக்கின்றனர்.

English summary
A flight of Pakistan's national carrier today landed in Lahore due to low visibility and asked passengers on-board to travel by bus to their destination, according to a media report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X