For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கப்பலிலிருந்து கடலில் தவறி விழுந்த பெண்.. பத்து மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு!

கப்பலில் இருந்து கடலில் விழுந்த பிரிட்டன் பெண் ஒருவர் பத்து மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

By Rajeswari
Google Oneindia Tamil News

பிரிட்டன்: கப்பலில் இருந்து கடலில் விழுந்த பிரிட்டன் பெண் ஒருவர் பத்து மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்

நார்வேயின் வர்கரோலாவிலிருந்து வெனீஸ் நோக்கி பெரிய சொகுசு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கப்பலில் பல மக்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 200க்கும் அதிகமான பயணிகள் அதில் சென்றுள்ளனர்.

A girl rescued from the sea after a ten-hour struggle in Britain

இந்நிலையில், அந்த கப்பல் குரேஷியா நாட்டு கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த சமயத்தில், அந்த கப்பலில் இருந்து ஒரு பெண் கடலுக்குள் தடுக்கி விழுந்தார்.பிரிட்டனை சேர்ந்த அந்த பெண் கப்பலின் மேல் கூரையில் ஏற முயற்சித்தபோது தவறுதலாக கால் தடுக்கி கடலுக்குள் விழுந்ததாக நார்வேஜியன் கப்பல் நிர்வாகம் கூறுகின்றனர்.

இந்த சம்பவமானது குரேஷியா நாட்டு கடல் பகுதியில் நடந்துள்ளது. கடலில் விழுந்த பிரிட்டன் பெண் தன் உயிரை கையில் பிடித்து கொண்டு இருந்துள்ளார். பத்து மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மீட்கப்பட்ட அந்த பெண் கூறுகையில், இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை. கடலில் தவறி விழுந்தவுடன் எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

சிறிது நேரத்திலே இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனாலும் நம்பிக்கையை தளரவிடாமல் மனதில் உறுதியுடன், காத்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

நான் கடலில் பத்து மணி நேரம் எந்த ஒரு நம்பிக்கையும் இன்றி தத்தளித்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் தான் இந்த அற்புதமான மனிதர்கள் என்னை மீட்டார்கள், என்றுள்ளார்.

English summary
A large luxury ship from Norway was headed towards Venice, and many people were traveling. In this case, a woman who was traveling on the ship fell into the sea. The girl who fell into the sea survived after a ten-hour struggle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X