For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தாங்க 5 டாலர்.. ரிசர்ச்-க்கு ஹெல்ப் பண்ணுங்க.. நியூசி., பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த சிறுமி

Google Oneindia Tamil News

வெலிங்டன்: டிராகன் தொடர்பாக ரிசர்ச் செய்ய தனக்கு உதவுமாறு கோரி, நியூசிலாந்து பிரதமருக்கு லெட்டர் எழுதிய சிறுமி அதோடு சேர்த்து 5 நியூசிலாந்து டாலர்களை லஞ்சமாக அனுப்பிய செய்தியை கேள்விப்பட்டு பலரும் வியப்படைந்துள்ளனர்.

நியூசிலாந்தை சேர்ந்த விக்டோரியா என்ற சிறுமிக்கு, டிராகன்கள் பற்றி அறிந்து கொள்வதிலும் அது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் இருந்துள்ளது. இதனையடுத்து அந்நாட்டு பிரதமரான ஜெசிண்டா ஆர்டர்னுக்கு லெட்டர் ஒன்றை அனுப்பியுள்ளார்.

A girl sends to bribe to New Zealand prime minister to train dragon and researches

அந்த லெட்டரில் நான் டிராகன்களுக்கு பயிற்சி அளிக்க விரும்புகிறேன், அதற்காக அரசு சார்பில் டிராகன் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் எழுதியிருந்தார். மேலும் டிராகன்களுக்கு பயிற்சியளிக்க தேவையான சக்திகளை தனக்கு வழங்க வேண்டுமெனவும் கோரியிருந்தார்.

இதற்காக 5 நியூசிலாந்து டாலர் (இந்திய மதிப்பில் ரூ.233) பணத்தயைும் அந்நாட்டு பிரதமருக்கு அனுப்பியிருந்தார். இச்சம்பவம் பலரையும் திகைப்புக்குள்ளாக்கியுள்ளது

3வது அம்பயர் தூக்கு போட்டு செத்துரணும்.. அப்படி திட்டினதுக்கு ஸாரி.. வருத்தப்பட்ட குட்டிப் பையன்! 3வது அம்பயர் தூக்கு போட்டு செத்துரணும்.. அப்படி திட்டினதுக்கு ஸாரி.. வருத்தப்பட்ட குட்டிப் பையன்!

இதனையடுத்து அச்சிறுமிக்கு பதில் லெட்டர் எழுதிய அந்நாட்டு பிரதமர் ஜெசிண்டா மன சக்திகள், டிராகன்கள் குறித்து நீங்கள் வழங்கிய பரிந்துரைகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால் இத்துறைகள் தொடர்பாக தற்போது அரசு ஆய்வு ஏதும் செயய்வில்லை

எனவே உங்களது ஆசையை நிறைவேற்ற அனுப்பிய லஞ்சத்தை உங்களிடமே திருப்பியனுப்புகிறேன். டிராகன்கள் தொடர்பான உங்களது தேடல் மேலும் வளர வாழ்த்துகிறேன். இருந்தாலும், டிராகன்கள் மீது நான் ஒரு கண் வைத்துக்கொள்கிறேன். டிராகன்கள் ஆடை அணிந்து வருமா நகைச்சுவையாக கேள்வி எழுப்பி லெட்டர் அனுப்பியுள்ளார்.

விக்டோரியாவின் கோரிக்கை குறித்து விளக்கமளித்துள்ள அவளது சகோதரர் நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பாகும் ஸ்ட்ரேஞ்சர்ஸ் திங்ஸ் தொடரை பார்த்து டிராகன்கள் மீதும் நுண்ணுணர்வுகள் மீதும் விக்டோரியாவுக்கு அதீத ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்

English summary
Many have been surprised by the letter sent by the Letter to the New Zealand Prime Minister, asking for a reserve relation to the dragon, as well as a message of 5 New Zealand dollars bribe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X