For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு ஆடு மேயரான கதை.. இதுக்கு நாய் சேகரே தேவலை போலருக்கே!

அமெரிக்காவில் விலங்குகளுக்கான தேர்தலில் ஒரு ஆடு ஒரு நகர மேயராக தேர்வாகியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: அமெரிக்காவில் விலங்குகளுக்கு இடையே நடைபெற்ற தேர்தலில், ஆடு ஒன்று ஒரு நகரத்தின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து ஏராளமான வினோத செய்திகள் வெளிவருவது வழக்கம் தான். அப்படி சமீபத்தில் வெளியான ஒரு செய்தி மிகுந்த வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அமெரிக்காவில் உள்ள ஒரு ஊரில், ஆடு ஒன்று மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது தான் அது.

A goat elected as mayor in America

வெர்மாண்ட் என்ற அந்த ஊரில் உள்ள கண்டர் என்பவர் விளையாட்டு மைதானம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக நிதி திரட்டிக்கொண்டிந்தார். அப்போது அமெரிக்காவில் உள்ள ஒரு ஊரில் பூனையை உயரதிகாரியாக்கியது தெரியவந்துள்ளது. இதையடுத்து தான் விலங்குகளுக்கு தேர்தல் நடத்தும் எண்ணம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த தேர்தல் மூலம் கிடைக்கும் நிதியை விளையாட்டு மைதானத்திற்கு பயன்படுத்த அவர் எண்ணியுள்ளார். இதையடுத்து, விலங்குகளுக்கான தேர்தலை அறிவித்தார். இதில் ஆடு, நாய், பூனை உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் மேயர் பதவிக்கு போட்டியிட்டன.

 பாகிஸ்தானின் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது... இந்திய ராணுவம் தகவல் பாகிஸ்தானின் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது... இந்திய ராணுவம் தகவல்

இந்த தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட 15 வேட்பாளையும் தோற்கடித்து, லிங்கன் என்ற ஆடு வெற்றி பெற்றது. மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த ஆடு ஒரு கணித ஆசிரியருக்கு சொந்தமானது. புதிய மேயருக்கு பதிவி பிரமாண விழா உள்பட ஏராளமான விழா எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த தேர்தலின் மூலம் கண்டருக்கு வெறும் 100 அமெரிக்க டாலர் தான் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
In America's Vermont town a goat was elected as a mayor of the city in a recent election conducted for animals.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X