For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரிட்டனை விட 3 மடங்கு பெரியது.. கண்ணை பறிக்கும் ஒளி.. பூமியை நோக்கி வரும் ராட்சச வெஸ்டா விண்கல்!

வெஸ்டா என்ற மிகப்பெரிய விண்கல் பூமிக்கு மிக அருகில் வர உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    பூமியை கடக்க இருக்கும் ராட்சச விண்கல்

    நியூயார்க்: வெஸ்டா என்ற மிகப்பெரிய விண்கல் பூமிக்கு மிக அருகில் வர உள்ளது. இன்னும் சில நாட்களுக்குள் அது பூமியை நோக்கி வேகமாக வரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வெஸ்டா என்பது கிரிக் வரலாற்றின் கடவுளின் பெயர் ஆகும். இதன் காரணமாக அந்த விண்கல்லிற்கு வெஸ்டா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த விண்கல்லை தற்போது அமெரிக்காவும் சீனாவும் ஆராய்ச்சி செய்து வருகிறது. அடுத்த மாதம் செவ்வாய் கிரகம் பூமிக்கு அருகில் வர இருக்கும் நிலையில் இதன் பயணமும் முக்கியத்துவம் பெறுகிறது.

    இதன் அளவு

    இதன் அளவு

    இந்த விண்கல்லின் அளவு, பிரிட்டனை விட மூன்று மடங்கு அதிகம் என்று நாசா தெரிவித்துள்ளது. பூமியில் டைனோசர் இனத்தை அழித்த விண்கல்லை விட இது இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பூமியில் விழுந்தால், பூமியின் முக்கால்வாசி பகுதியை அழித்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இது 8 லட்சம் சதுர கிலோ மீட்டர் அளவு இருக்கும் என்று கூறப்படுகிறது.

    வெறும் கண்ணால் பார்க்க முடியும்

    வெறும் கண்ணால் பார்க்க முடியும்

    1 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தும் இதை எளிதாக பார்க்க முடியும். இந்தியாவில் இதை அதிகாலையில் செவ்வாய் கிரகத்திற்கு அருகில் பார்க்க முடியும். தற்போது இது செவ்வாய் கிரகத்திற்கு அருகில் உள்ளது. ஜூலை 16ம் தேதி வரை இது பூமியை நோக்கி வரும்.

    என்ன நடக்கும்

    என்ன நடக்கும்

    இது ஜூலைக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக பூமியைவிட்டு விலக ஆரம்பிக்கும். ஜூலை 16ம் தேதி பூமிக்கு மிக அருகில் வரும். ஆனால் பூமியில் இது மோத வாய்ப்பு கிடையாது என்று கூறப்படுகிறது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக பூமியை விட்டு விலகி செல்ல ஆரம்பிக்கும்.

    மீண்டும் எப்போது

    மீண்டும் எப்போது

    இந்த விண்கல் கண்டுபிடிக்கப்பட்ட போது இது சூரியனுக்கும் மிக அதிக தொலைவில் இருந்தது. இது தற்போது 8000 கிமீ வேகத்தில் செல்கிறது. இதன் வேகம் மிகவும் அதிகம் ஆகி உள்ளதால் சீக்கிரமே பூமியை கடந்துவிடும் என்று கூறப்படுகிறது. இது ஏற்கனவே பூமியை 2001 ல் ஒருமுறை கடந்துள்ளதாக கூறபடுகிறது. இன்னும் 20 வருடம் கழித்து மீண்டும் கடக்க வாய்ப்புள்ளது.

    English summary
    A HUGE asteroid named Vesta will pass through the Earth in few days. According to NASA people can see it in their bare eyes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X